Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

குளிர்கால நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. நிபுணர் பரிந்துரை..

குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் சளி - இருமல், வைரஸ் தாக்குதல்களைத் தடுப்பதற்கான சிறந்த குளிர்கால காய்கறிகள் என்ன? கரட், பசலைக் கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட 7 முக்கிய காய்கறிகளை நிபுணர் ஆயிஷா பர்வீன் விளக்கம்.

குளிர்காலம் தொடங்கும் தருணத்திலேயே சளி, இருமல், வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பது வழக்கம். இதைத் தடுக்க பலர் கூடுதல் மருந்துகள், சப்பிளிமெண்ட்ஸ் என விரைவில் நிவாரணம் தரும் வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு நம் சமையலறையில் இருக்கும் சீசன் காய்கறிகள் போதுமானவை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெங்களூரு Kinder Women’s Hospital & Fertility Centre–இல் பணிபுரியும் டயட்டிஷன் ஆயிஷா பர்வீன், Onlymyhealth–க்கு அளித்த நேர்காணலில், குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்தும் 7 முக்கிய காய்கறிகளை பகிர்ந்து கொண்டார்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்

1. கேரட் – சுவாச மண்டல பாதுகாப்புக்கு முதன்மை!

கேரட்டில் உள்ள பீட்டா–கரோட்டீன், உடலில் விட்டமின் A–ஆக மாறி சுவாச மண்டலத்தைக் காக்கும் முக்கிய வேலை செய்கிறது. சூப், சாலட், ஜூஸ் என எந்த வடிவத்தில் எடுத்தாலும் நோய் எதிர்ப்பு தகுதியை உயர்த்தும்.

2. பசலைக் கீரை – இரத்தத்துக்கும் WBC வளர்ச்சிக்கும் உதவும்

குளிர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் பசலைக் கீரை இரும்புச் சத்து, ஃபோலேட், விட்டமின் C, ஆன்டி–ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்தது. ஆயிஷா பர்வீன் கூறுவதாவது, “பசலைக் கீரை WBC உற்பத்தியை அதிகரித்து உடலை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.” பசலைக் கீரை பருப்பு, கீரை பொரியல் ஆகியவையாக சாப்பிட பரிந்துரை.

3. ப்ரோக்கோலி – குளிர்கால சளி–இருமலுக்கான கவசம்

விட்டமின் C, K, நார்ச்சத்து, சல்போராஃபேன் போன்ற ஆன்டி–ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ப்ரோக்கோலி, நோய் எதிர்ப்பு சக்தியை நேரடி உயர்த்தும். அதனை லேசாக நீராவியில் வேகவைத்து உண்பது சிறந்தது.

4. சக்கரைவள்ளிக் கிழங்கு – குடல் நலத்தால் நோயெதிர்ப்பு அதிகரிப்பு

சக்கரைவள்ளிக் கிழங்கில் விட்டமின் A, C, பொட்டாசியம், நார்ச்சத்து மிக அதிகம். "இது குடல் நலத்தை சீராக்கி, நோயெதிர்ப்பு சக்தியை மூலமாகவே உயர்த்துகிறது," என்று நிபுணர் கூறுகிறார். சூப், வேகவைத்து, ரோஸ்ட் செய்து எதுவாகவும் உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பனிக்காலத்தில் அதிகரிக்கும் சளி இருமல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு.! கரிசலாங்கண்ணி கீரை செய்யும் அதிசயம்.! மருத்துவர் சிவராமன் விளக்கம்..

5. பீட்ரூட் – இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தொற்றுகள் தடுக்கிறது

குளிர்காலத்தில் சீக்கிரம் சோர்வடைவோருக்கு
பீட்ரூட் ஒரு இயற்கை ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. இதில் உள்ள நைட்ரேட்ஸ் ரத்த ஓட்டத்தை உயர்த்தி, உடலின் ஆக்ஸிஜன் சீராக்கும்.

6. காலிஃபிளவர் – அழற்சி குறைத்து நோய் எதிர்ப்பு கட்டமைப்பு

காலிஃபிளவர் என்பது எளிமையான காய்கறி என்றாலும் அதில் உள்ள விட்டமின் C, கோலின், ஆன்டி–ஆக்ஸிடென்ட்கள் உடலின் டிடாக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. காலிஃபிளவர் சூப், கோபி பரோட்டா, பொரியல் என
பல வடிவங்களில் உட்கொள்ளலாம்.

7. பச்சைப் பட்டாணி – குடல் நலத்தையும் நோயெதிர்ப்பையும் மேம்படுத்தும்

குளிர்காலத்தில் கிடைக்கும் சுவை மிகுந்த பச்சைப் பட்டாணியில் விட்டமின் C, K, நார்ச்சத்து, தாவர புரதம் நிறைந்தது. இது இரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தும், குடல் நலத்தை மேம்படுத்தும், தொற்று நோய்களுக்கு எதிர்ப்பு தரும்.

இறுதியாக..

மருந்துகள் அல்லது சப்பிளிமெண்ட்ஸில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், குளிர்காலம் தரும் இயற்கை காய்கறிகளையே உணவில் கொண்டுவருவது நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக, பாதுகாப்பாக வளர்க்க உதவும். ஒவ்வொரு உணவிலும் ஒரு சீசனல் காய்கறியைச் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது ஆரோக்கியத் தகவல்களை மட்டும் வழங்குகிறது. இங்கே கூறப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது போஷக நிபுணரிடம் ஆலோசனை பெறவும். உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் குறிப்பாக மருத்துவ ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும்.

Read Next

பனிக்காலத்தில் அதிகரிக்கும் சளி இருமல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு.! கரிசலாங்கண்ணி கீரை செய்யும் அதிசயம்.! மருத்துவர் சிவராமன் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 05, 2025 09:21 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content