Fri Sep 11, 2026 | 09:50 PM IST

Doctor Verified

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 சிறந்த உணவுகள்.. நிபுணரின் பரிந்துரை.!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க புரதம் நிறைந்த உணவுகள், சூடான பானங்கள், பச்சை இலை காய்கறிகள் ஏன் அவசியம்? நிபுணர் நேஹா சின்ஹா கூறும் முக்கிய உணவு ஆலோசனைகள் இங்கே.

குளிர்காலம் தொடங்கியவுடன் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் வெப்பம் குறைவதால், நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பாதிக்கப்படும் நிலையும் ஏற்படலாம். இந்நிலையில், உணவில் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட உடல் நலத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ நூலகம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) ஆகியவை வெளியிட்டுள்ள தகவலின்படி, உணவில் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவது மட்டுமல்லாமல், பருவகால நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. அதைத் தவிர்க்க, குளிர்காலத்தில் உணவில் சேர்க்க வேண்டிய மூன்று முக்கிய உணவுகளை நிபுணர் விளக்குகிறார்.

1. புரதம் நிறைந்த உணவுகள் – உடலை வலுப்படுத்தும் முதல் பாதுகாப்புக் கவசம்

புரதம் உடலில் தசை திசுக்களைச் சரிசெய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. உணவில் சேர்க்க வேண்டிய புரதச்சத்து நிறைந்த உணவுகள்:

* பருப்பு வகைகள்

* முட்டை

* பன்னீர், சீஸ்

* தயிர்

* சோயா உணவுகள்

* பீன்ஸ், வேர்க்கடலை

இந்த உணவுகள் உடல் சூட்டை பராமரித்து, குளிரால் ஏற்படும் உடல் பலவீனத்தை தடுக்க உதவும்.

2. சூடான பானங்கள் – தொண்டை மற்றும் சுவாச பாதையை பாதுகாக்கும் இயற்கை கவசம்

குளிர்காலத்தில் தினசரி சூடான பானங்களை உட்கொள்வது சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்க சிறந்த வழி. உணவில் சேர்க்க வேண்டிய சூடான பானங்கள்:

* சூப்

* குழம்பு நீர்

* மூலிகை தேநீர்

* இஞ்சி-எலுமிச்சை நீர்

சூடான பானங்களில் உள்ள வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் தொண்டை மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: சப்ளிமெண்ட்ஸ் எடுத்தும் இரும்புச்சத்து இல்லையா? அதற்கான காரணங்களும், அயர்ன் லெவலை அதிகரிக்கும் வழிகளும்

3. பச்சை இலை காய்கறிகள் – முக்கிய ஊட்டச்சத்துகளின் பொக்கிஷம்

குளிர்காலத்தில் பச்சை இலை காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக உயர்த்தும். சேர்க்க வேண்டிய கீரைகள்:

* வெந்தய கீரை

* பசலைக் கீரை

* கடுகு கீரை

இவற்றில் வைட்டமின் A, C, K, ஃபோலேட், இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பசலைக் கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலை free-radical சேதத்திலிருந்து பாதுகாக்கும். வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும்.

இறுதியாக..

குளிர்காலத்தில் உடலின் பாதுகாப்பு சக்தியை உயர்த்த, பொருத்தமான உணவுகள் மிகவும் அவசியம். புரதம் நிறைந்த உணவுகள், சூடான பானங்கள், பச்சை இலை காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் வலுவாகும். பருவகால நோய்கள் வருவதற்கான அபாயமும் குறிப்பிடத்தகுந்த அளவில் குறையும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான மருத்துவ தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உடல்நலத்திற்காக பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவும். இது மருத்துவ சிகிச்சைக்கான மாற்றாகாது.

Read Next

தினசரி ஒரு சூப் போதும்.. உடல் எடையை குறைக்கலாம்.! மருத்துவர் உஷா நந்தினி விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 27, 2025 20:15 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content