Fri Sep 11, 2026 | 11:41 PM IST

Herbs for acne: முகத்தில் உள்ள பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைய இந்த ஹெர்ப்ஸ் யூஸ் பண்ணுங்க

What natural herbs are good for acne: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் போன்றவை சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அவ்வாறே சருமத்தில் பலரும் பருக்களைக் கொண்டுள்ளனர். இதில் சருமத்தில் பருக்கள் மறைய உதவும் மூலிகைகளைக் காணலாம்.

Which herbs are good for reducing acne: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவற்றால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சரும பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறு சருமத்தில் வெடிப்பு, வறண்ட சருமம், பருக்கள், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க சிலர் வெளியில் கிடைக்கும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம்.

இந்நிலையில், இயற்கையான முறைகளைக் கையாள்வது நல்லது. அதன் படி, முகப்பருவுக்கு மூலிகைகளைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்த தேர்வாகும். இது கிரீம்கள் மற்றும் ஜெல் வடிவில் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகும். இந்த மூலிகைகளைப் பயன்படுத்துவது சருமத்தை சுத்தம் செய்வதிலும், நீரேற்றத்தை மீட்டெடுக்கவும், வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த மூலிகைகளில் சிலவற்றை ஃபேஸ் பேக்குகளில் சேர்த்து பயன்படுத்தலாம். எனினும், இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே மூலிகைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே இரவில் பருக்களை விரட்ட.. அற்புதமான வீட்டு வைத்தியம் இங்கே.!

முகப்பரு எதனால் ஏற்படுகிறது?

சருமத்தில் முகப்பரு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவ்வாறே எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் துளைகள் போன்றவற்றால் முகப்பரு ஏற்படலாம். ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், மோசமான தோல் பராமரிப்பு பழக்கம் மற்றும் உணவு முறை போன்றவை அதிகப்படியான எண்ணெய்க்கான காரணங்களாகும். மேலும் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளாலும் முகப்பரு ஏற்படுகிறது. இந்த முகப்பருக்களை விரைவில் போக்க சில ஆரோக்கியமான மூலிகைகளைப் பயன்படுத்தலாம்.

முகப்பருவை நீக்க உதவும் மூலிகைகள்

முகப்பரு சிகிச்சைக்கு சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு விரைவான முடிவுகளைத் தருகிறது.

கற்றாழை

சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவப்பைக் குறைக்க கற்றாழையைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, அதன் அமைப்பையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. சருமத்திற்குக் கற்றாழை ஜெல்லை நேரடியாகப் பயன்படுத்தலாம் அல்லது சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் போல மெதுவாக எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம்.

துளசி

சருமத்திற்கு துளசியைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆய்வு ஒன்றில் இனிப்பு துளசி இலைகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் போன்றவை பாக்டீரியாக்களுக்கு எதிரான பாக்டீரியா எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. மேலும், துளசியானது முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே தான் இது முகப்பரு சிகிச்சை மற்றும் தடுப்புக்கான மிக வேகமாக செயல்படும் மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு துளசி இலைகளை ரோஸ் வாட்டரில் கலந்து சுத்திகரிக்கும் ஃபேஸ்மாஸ்க்கை தயார் செய்யலாம் அல்லது துளசி பொடியை மஞ்சள் மற்றும் பாலுடன் கலந்து எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin care remedies: சருமம் ஹெல்த்தியா, பளபளப்பா இருக்கணுமா? இந்த ரெமிடிஸ் ஃபாலோ பண்ணுங்க

மஞ்சள்

மஞ்சளில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது பாக்டீரியாவைக் கொல்லவும், சருமத்தை ஒளிரச் செய்யவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மஞ்சளானது முகப்பருவைக் குறைப்பதைத் தவிர, மேற்பூச்சு மற்றும் உட்கொண்ட மஞ்சள் சரும ஆரோக்கியத்தையும் பொதுவாக செயல்பாட்டையும் மாற்றியமைக்க உதவுகிறது. ஃபேஸ் மாஸ்க்கிற்கு சிறிது தேன் மற்றும் தயிர் சேர்க்கலாம். இதை தண்ணீரில் கலந்து எக்ஸ்ஃபோலியேட்டராக மாற்றலாம்.

வேம்பு

வேம்புவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது முகப்பருவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், அடைபட்ட துளைகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், வேம்பு ஆனது லேசானது முதல் மிதமான முகப்பருவைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு வேப்பம்பூ பொடியை தேன் மற்றும் ரோஸ் வாட்டருடன் சேர்த்து ஒரு இனிமையான ஃபேஸ் மாஸ்க்கைத் தயார் செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Preventions For Pimples: முகப்பருவை கிள்ளினால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்!

 

Image Source: Freepik

Read Next

தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற... வீட்டிலேயே பேக் தயாரிக்கலாம் வாங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content