Sat Sep 12, 2026 | 02:02 AM IST

Benefits Of Hot Water: காலையில் டீ, காஃபிக்கு பதில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Is it good to drink hot water in the morning everyday: நம்மில் பலர் நமது நாளை ஒரு கப் டீ அல்லது காஃபியுடன் துவங்குவோம். காலையில் மட்டும் அல்ல, ஒரு நாளைக்கு 8 டீவரை அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு உள்ளனர். தலைவலி, சோர்வு, கவலை என எதுவாக இருந்தாலும் டீ, காஃபி குடிப்பது பலரின் வழக்கம். ஆனால், இவைகளுக்குப் பதிலாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த வகையிலும் நன்மை தராது.

வெந்நீரின் நன்மைகளை தெரிந்து கொண்டால், இந்த சிறிய மாற்றத்தின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை உணர்வீர்கள். இதன் முழு நன்மையை பெற, நாள் முழுவதும் 7 முதல் 10 கிளாஸ் வெந்நீர் குடிக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் எடை இழப்பு விரைவாக நிகழும். மேலும் உங்கள் உடலை டீடாக்ஸ் செய்வதுடன், பல கடுமையான நோய்களின் அபாயத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Blood sugar level: வெந்நீர் குடிப்பதால் சர்க்கரையின் அளவு குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

செரிமானத்திற்கு நல்லது

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பவர்களுக்கு உணவு எளிதில் ஜீரணமாகாது.

இதனால், வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ந்த நீர் குடிப்பதாலும் வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. வெந்நீர் அசிடிட்டியில் இருந்தும் நிவாரணம் தரும்.

இந்த பதிவும் உதவலாம் : சளி மற்றும் இருமல் இருக்கும் போது வெந்நீர் குடிப்வரா நீங்க? அப்போ இத கண்டிப்பா படிங்க!

உடலை டீடாக்ஸ் செய்யும்

வெந்நீர் குடிப்பதன் மூலம் நமது உடல் வெப்பநிலை அதிகரித்து, உடல் வியர்க்க ஆரமிக்கும். இதனால், உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இவ்வாறு செய்வதால் உடல் சுத்தமாகி பல நோய்கள் வராமல் தடுக்கிறது.

வெந்நீர் அருந்துவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், இந்த உணவுத் துகள்கள் மிக எளிதாகவும், குறைந்த வலியுடனும் நமது குடல் வழியாகச் சென்று, மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Water For Skin: சருமம் ஆரோக்யமாகவும் பளபளப்பாகவும் இருக்க தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கணுமா?

இரத்த ஓட்டமும் சீராகும்

வெந்நீர் அருந்துவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வந்தால், அது நம் உடலின் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. சரியான இரத்த ஓட்டத்துடன், ஆக்ஸிஜன் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது எளிதாகிறது. இதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம்.

தொண்டை பாக்டீரியாக்களை கொல்லும்

சளி மற்றும் இருமலின் போது வெந்நீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது தொண்டைக்கு நிறைய நிவாரணம் அளிக்கிறது. இது சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் இருமல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. காய்ச்சலையும் சளியையும் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வெந்நீர் உடலில் இருந்து நீக்குகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

World Water Day: தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இங்கே…

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content