Actor Vishal Health Update: ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட நடித்த படம் மதகஜராஜா. இந்த படமானது கடந்த 2012ல் உருவானது, 2013ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு மதகஜராஜா படம் வெளியாக உள்ளது. 2013 பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படமானது 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ப்ரொமோஷன் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிகம் படித்தவை: Best Diet Plan: 1 மாதத்தில் 10 கிலோ எடை குறைக்க உதவும் பெஸ்ட் டயட் பிளான்!
நடிகர் விஷால் உடல்நிலை
அதன் ஒரு பகுதியாக மதகஜராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், சுந்தர்.சி, குஷ்பு, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற விஷால், வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக காணப்பட்டார். விஷால் மெலிந்த தோற்றத்துடன், நடுக்கத்துடன் தாங்கி தாங்கி நடக்கும்படியாக காட்சியளித்தார்.
மேலும் மேடையில் மைக் பிடித்து பேசும்போது கை பெரிதளவு நடுங்கியது. இதை பார்த்த ரசிகர்கள் விஷாலுக்கு என்னாச்சு என அதிர்ச்சியடைந்து தொடர்ந்து கேள்வி எழுப்பினர். நடிகர் விஷாலுக்கு தீவிர காய்ச்சல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
விஷால் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் விஷால் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நடிகர் விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் உரிய சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவரை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
image source: social media
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.