Fri Sep 11, 2026 | 11:08 PM IST

ரோபோ சங்கர் இறப்புக்கு என்ன காரணம்.? மருத்துவமனை வெளியிட்ட தகவல்.!

நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரோபோ சங்கர் குடல் இரத்தக்கசிவு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரங்கள் இங்கே.

திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடிகரும் பிரபல நகைச்சுவை கலைஞருமான ரோபோ சங்கர் (46) செப்டம்பர் 18 அன்று காலமானார். சமீபத்தில் தொடங்கிய புதிய படப்பிடிப்பில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவ அறிக்கை

GEM மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையில், செப்டம்பர் 16, செவ்வாய்க்கிழமை, ரோபோ சங்கர் "வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையில்" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர மருத்துவ ஏற்பாடுகளை செய்த போதிலும், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வியாழக்கிழமை இரவு 9.05 மணிக்கு காலமானார் என்று அறிக்கை கூறுகிறது.

artical  - 2025-09-19T094750.207

சமீப கால உடல்நிலை

சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் அவர் நீண்டநாள் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் ஏற்பட்ட உடல் எடை குறைவு ரசிகர்களிடம் கவலைக்குரியதாக இருந்தது. இருப்பினும் அவர் விரைவில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் மீண்டும் செயல்படத் தொடங்கினார்.

திரைப்பயணம்

மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், தொலைக்காட்சியில் ரோபோ நடனங்களின் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அதன்பின்னர் “வாயை மூடி பேசவும்” (2014), “மாரி” (2015) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சிங்கம் 3, வேலைக்காரன், கலகலப்பு 2, மாரி 2, இரவின் நிழல், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறைப்பாக வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைபடத்தில் உள்ள “அன்னைக்கு காலையில ஆறு மணி” வசனம் மூலம் பிரலமானார்.

தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பாகும்.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே மஞ்சள் காமாலையின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது.?

Dislaimer: இந்த செய்தி GEM மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் உடல்நல மற்றும் மருத்துவ விவரங்கள் வாசகர்களுக்கான தகவல்களாக மட்டுமே கருதப்பட வேண்டும்.

Read Next

நீங்க செய்யும் இந்த பழக்கங்கள் உங்க குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.. நிபுணர் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 19, 2025 09:55 IST

    Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content