Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

இப்போ தான் சாப்பிட்டீங்களா.? ஒரு 10 நிமிஷம் நடங்க பாஸ்.. அவ்ளோ பெனிஃபிட்ஸ் இருக்கு.!

உணவுக்குப் பிறகு வெறும் 10 நிமிஷம் நடந்து விட்டால் இரத்த சர்க்கரை, செரிமானம், உப்புசம், ரீஃப்ளக்ஸ், டிரிகிளிசரைட்ஸ், தூக்கம் என பலவற்றில் எப்படி மாற்றம் ஏற்படும் என்பதை மருத்துவர் சௌரப் சேதி விளக்குகிறார்.

அன்றாட உணவு வழக்கத்தில் ஒரு சிறிய மாற்றமே நம்முடைய உடலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கேஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “உணவுக்குப் பிறகு 10–12 நிமிஷம் மெதுவாக நடந்தாலே உடல் பெற்றுக் கொள்ளும் நன்மைகள் எண்ணிலடங்காதவை” என அவர் கூறுகிறார்.

1. இரத்த சர்க்கரை 30% வரை குறையும்

உணவுக்குப் பிறகு நடந்தால், உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் வேகமாக சேர்வது தடுக்கப்படுகிறது. அதன் மூலம்:

* சர்க்கரை ஸ்பைக் குறையும்

* இன்சுலின் சுரத்தல் சீராகும்

* உடல் எரிசக்தி நிலை ஒழுங்காகும்

* அலெர்ஜி (inflammation) குறையும்

2. இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேம்படும்

சிறு நடைப்பயிற்சியே தசைகளுக்கு "இரத்தத்திலிருந்து குளுகோஸை எடுத்துக் கொள்" என்ற சிக்னலை அனுப்புகிறது. இதனால்:

* அதிக இன்சுலின் தேவையில்லை

* சர்க்கரை வளைவு (glucose curve) பெரிதாக உயராது

* தசை "metabolically active" ஆகும்

அதனால், மருந்துகளை விட post-meal walk அதிக பலன் தருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

3. செரிமானம் வேகமாகும்

சிறு நடை GI tract-க்கும், vagus nerve-க்கும் தூண்டல் கொடுக்கும். இதன் மூலம்:

* உணவு குடல் வழியாக சீராக நகரும்

* செரிமான சோம்பல் குறையும்

* மலச்சிக்கல் பிரச்சனை தணியும்

நடப்பது = நம் உடலை இயக்கும் இயற்கை மருந்து.

இந்த பதிவும் உதவலாம்: அஸ்வகந்தா முதல் பூசணி விதைகள்.. ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 சூப்பர்ஃபுட்கள் இங்கே

4. உப்புசம் உடனடியாக குறையும்

உணவுக்குப் பிறகு வயிறு கனமாக இருப்பவர்களுக்கு சிறு நடை மிகப் பெரிய தீர்வு. இதன் மூலம்:

* வாயு தேக்கம் குறையும்

* குடல் இயக்கம் அதிகரிக்கும்

* IBS பிரச்சனை குறையும்

5. அமிலத்தமை குறையும்

உணவுக்குப் பிறகு உட்கார்ந்தாலும், படுத்தாலும் ரீஃப்ளக்ஸ் அதிகரிக்கும். ஆனால் மெதுவாக நடப்பதால்:

* உணவுப்பாதை சீராக திறக்கும்

* அமிலம் மாறுபட்ட திசைக்கு செல்லாது

* இரவு உணவுக்குப் பிறகு 10 நிமிஷம் நடப்பதே நெஞ்சு எரிச்சலுக்கு மிகச் சிறந்த நிவாரணம்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

6. டிரிகிளிசரைட்ஸ் சிறப்பாக கட்டுப்படும்

உணவுக்குப் பிறகு நடக்கும்போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு விரைவாக நாசமாகிறது. நீண்ட காலத்தில் இது:

* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

* fatty liver குறைக்கும்

* inflammation குறையும்

* வயிற்று கொழுப்பை கட்டுப்படும்

7. இரவு தூக்கம் கணிசமாக மேம்படும்

நாள் முழுவதும் சாப்பிடும் உணவு glucose-ஐ கட்டுப்படுத்தும். ரீஃப்ளக்ஸ் குறைவதால்:

* தூக்கம் ஆழமாகும்

* hormones சீராகும்

* குடல் இயக்கம் மேம்படும்

உணவுக்குப் பிறகு 10 நிமிஷம் நடப்பது = உடல் சமநிலைக்கு ரகசியம்.

இறுதியாக..

உணவுக்குப் பிறகு வெறும் 10 நிமிஷ நடை நம் உடலின் நரம்பு மண்டலத்திற்க்கும் பயன் தருகிறது. இதை தினசரி பழக்கமாக மாற்றினால், சர்க்கரை கட்டுப்பாடு முதல் குடல் ஆரோக்கியம் வரை உடல் முழுவதும் மாற்றம் காணலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. உடல்நலம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது கொழுப்பை வேகமாகக் குறைக்குமா? நிபுணர் தரும் விளக்கம் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 19, 2025 18:22 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content