Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

PCOS-ஐ அதிகரிக்கும் பழக்கங்கள்.. இப்போதே நிறுத்துங்கள்.. டாக்டர் அட்வைஸ்..

தவறான உணவு, உடல் இயக்கமின்மை, பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள், மன அழுத்தம், தூக்கக் குறைபாடு – இவை PCOS அபாயத்தை அதிகரிக்கும் என IVF நிபுணர் டாக்டர் ஹரிகா மாதி எச்சரிக்கை.

பெண்களின் இனப்பெருக்க நலனை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக PCOS (Polycystic Ovary Syndrome) அதிகரித்து வருகிறது. மாதவிடாய் சீர்கேடு, ஹார்மோன் சமநிலையின்மை, கருவுறுதலில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த நிலைக்கு காரணமாக தவறான வாழ்க்கை முறை பழக்கங்கள் தான் என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த Fertility மற்றும் IVF நிபுணர் டாக்டர் ஹரிகா மதி. மேலும் PCOS அபாயத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PCOS அபாயத்தை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்

மோசமான உணவுப் பழக்கம்

டாக்டர் ஹரிகா மதி கூறுகையில், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் (Refined carbs), பதப்படுத்தப்பட்ட உணவுகள் (processed foods), ஆரோக்கியமற்ற கொழுப்புகள் (unhealthy fats) போன்றவை அதிகம் உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) மோசமாக்குகிறது. மேலும் நார்ச்சத்து குறைவான உணவும், புரதம் குறைவான உணவும் PCOS-ஐ தூண்டும் முக்கிய காரணிகள்.

உடல் இயக்கமின்மை

இன்றைய காலத்தில் நீண்ட நேரம் சாய்ந்து உட்காரும் பழக்கம், உடற்பயிற்சியை தவிர்ப்பது போன்றவை அதிகமாகிவிட்டன. இவை எடை அதிகரிப்புக்கும், ஹார்மோன் சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி, PCOS அபாயத்தை தூண்டுகின்றன.

artical  - 2025-09-09T155146.125

ரசாயனப் பொருட்கள்

பிளாஸ்டிக் பாட்டில்கள், Non-stick பாத்திரங்கள், Cosmetics-இல் உள்ள Parabens, Phthalates, காய்கறி-பழங்களில் உள்ள பூச்சி மருந்து மீதிகள், பாக்கெட் உணவுகளில் Preservatives – இவை அனைத்தும் ஹார்மோன்களை குலைக்கும்.

மன அழுத்தம்

வேலை அழுத்தம், தனிப்பட்ட மன உளைச்சல், உடல் அமைப்பு குறித்த மனச்சோர்வு ஆகியவை நீண்டகாலமாக இருந்தால், கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பு மோசமடைந்து PCOS அபாயம் உயரும்.

தூக்கக் குறைபாடு

இரவு நேரம் தாமதமாக தூங்குதல், 7 மணிநேரத்திற்குக் குறைவான தூக்கம் போன்றவற்றால் ஹார்மோன் சீர்கேடு ஏற்பட்டு, PCOS பிரச்சினை மோசமடையும் என நிபுணர் எச்சரிக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: வெந்தயம் & இலவங்கப்பட்டை - PCOS பெண்கள் கவனிக்க வேண்டிய 2 சூப்பர்ஃபுட்ஸ்! மருத்துவர் பரிந்துரை..

நிபுணர் அறிவுரை

டாக்டர் ஹரிகா மாதி கூறுகையில், PCOS-ஐ தடுப்பது வாழ்க்கை முறையையே திருத்துவதில்தான் உள்ளது.

* சீரான உணவு (புரதம் + நார்ச்சத்து அதிகம்)

* தினசரி உடற்பயிற்சி

* பிளாஸ்டிக், ரசாயனப் பொருட்களைத் தவிர்த்தல்

* யோகா, தியானம் மூலம் மனஅழுத்த கட்டுப்படுத்தல்

* 7–8 மணி நேர தூக்கம்

இவை அனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.

View this post on Instagram

A post shared by Dr Harika Mathi (@dr.harikamathi)

இறுதியாக..

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. சிறிய பழக்கங்களை மாற்றினால், PCOS போன்ற பெரிய பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியும் என டாக்டர் ஹரிகா மாதி வலியுறுத்துகிறார்.

{Disclaimer: இந்த செய்தி பொது தகவல் வழங்குவதற்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. PCOS அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு, தகுந்த மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம்.}

Read Next

பெண்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் - காரணங்கள் மற்றும் குறைக்கும் முறைகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content