Women Health: பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Women Health: பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!


Which food is good for female reproductive system: இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் ஓய்வு இல்லாமல் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்யும்போது தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. சில சமயம் குழந்தைகளாலும், சில சமயம் நேரமின்மையாலும் தன் உடல்நிலையை முழுமையாக புறக்கணிக்கின்றனர்.

இதன் தாக்கம் சில நாட்களுக்கு பின் அவர்களின் ஆரோக்கியத்தில் தெரியும். படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள். இதனால், பல உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவை. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், வயது ஏற ஏற, தசை பலவீனம், ரத்த அழுத்தம், கால்சியம் குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

இந்த பதிவும் உதவலாம் : Hormonal Imbalance: இதனால் தான் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது..

பெண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தங்களை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் தங்களின் உணவு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் சூப்பர் உணவுகள்

நெல்லிக்காய்

நெல்லிக்காயின் நன்மைகள் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சிறந்த தேர்வு. அவை குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது தவிர, கால்சியத்தை குறைக்க நினைத்தால் முழு நெல்லிக்காயை உட்கொள்ளலாம். பெண்களுடன், ஆண்களும் நெல்லிக்காயை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காய் பொடி, ஜூஸ், தேன் நெல்லிக்காய் போன்ற வடிவங்களில் இதை சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம்

பெண்கள் வீடு மற்றும் அலுவலக வேலைக்காக நீக்காமல் ஓடுகின்றனர். எனவே, அவர்கள் எளிதில் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர ஆரம்பிக்கிறார்கள். சோர்வைத் தவிர்க்க, பெண்கள் தங்கள் உணவில் பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். பெண்களின் சோம்பல், பலவீனம், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவற்றை சரி செய்ய பேரீச்சம்பழம் மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : Skin Condition During Periods: மாதவிடாய் சமயத்தில் சரும பிரச்சனையா? அதுக்கு இத செய்யுங்க.

எள்

பெண்களின் நரம்பு மண்டலம், தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எள் சாப்பிடலாம். இது பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை நீக்க உதவுகிறது. மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன் பெண்கள் வறுத்த எள்ளை உட்கொண்டால், மாதவிடாய் வலி குறையும்.

தேங்காய்

தேங்காய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. இது நமது பித்த தோஷம் மற்றும் வாத தோஷத்தை போக்க உதவுகிறது. தேங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் சோர்வு நீங்கி எலும்புகள் வலுவடையும். மேலும், தைராய்டு மற்றும் பெண்களின் நோய் கோளாறுகள் குறைகிறது. ஆரோக்கியமாக இருக்க, பெண்கள் சர்க்கரை மிட்டாயுடன் சேர்த்து தேங்காய் சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Gestational Diabetes Foods: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க.

கருப்பு திராட்சை

இயல்பாகவே நாம் அனைவருக்கும் திராட்சை பிடிக்கும். பெண்களின் வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்க திராட்சை மிகவும் நல்லது. தினமும் காலையில் திராட்சையை உட்கொள்வதால் உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பதோடு செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடல் ஆரோக்கியத்திற்கும், உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்கவும், பெண்கள் தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் மனம் அமைதியடைந்து பித்த பிரச்சனைகள் குறையும்.

தேவையான ஆற்றலை பெற பெண்கள் தங்கள் உணவை மாற்றுவது மிகவும் முக்கியம். இது பெண்களுக்கு ஏற்படும் சோர்வு, பலவீனம், தசை வலி மற்றும் விறைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர உலர் பழங்கள், பருவகால காய்கறிகள் மற்றும் கேரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெண்கள் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Painkiller During Periods: மாதவிடாய் வலி நீங்க மாத்திரையா? இது தெரிஞ்சா நீங்க எடுத்துக்க மாட்டீங்க.

Disclaimer