National women’s health and fitness day 2024: ஆண்டுதோறும் பெண்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க தேசிய பெண்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி தினம் கொண்டாடப்படுகிறது. இது செப்டம்பர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினமானது, அனைத்து வயது பெண்களும் வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதை முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.
இந்த தினத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றவும், உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது. ஆனால், இன்றைய காலகத்தில் பெண்களின் ஊட்டச்சத்து தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இதில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது, அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். அதன் படி, பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Remedy for Periods: மாதக்கணக்கில் வராத பீரியட்ஸூம் உடனே வர இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க போதும்
பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
இந்த தேசிய பெண்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி தினத்தை முன்னிட்டு, பெண்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்.
பெர்ரி
பொதுவாக பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். அதன் படி, அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் இது நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். எனவே இது செரிமானம் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
கீரை வகைகள்
பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டசத்துக்கள் நிறைந்த கீரை வகைகளை உட்கொள்ளலாம். குறிப்பாக, பசலைக் கீரையில் நிறைந்துள்ள இரும்புச்சத்துக்கள் பெண்களுக்கு மாதவிடாய் காரணமாக ஏற்படும் இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செல் மீளுருவாக்கம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
பருப்பு
பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த வளமான மூலமாகும். குறிப்பாக, வேகன் அல்லது சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு பருப்பு சிறந்த தேர்வாகும். மேலும், பருப்பு வகைகளில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Badam Pisin: மாதவிடாய் காலத்தில் பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லதா? நன்மைகள் இங்கே!
சியா விதைகள்
சியா விதைகள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தசை செயல்பாடு, எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, கர்ப்ப காலம் மற்றும் வயதான காலத்தில் தேவைப்படுகிறது.
வால்நட்ஸ்
இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவையாகும். மேலும், வால்நட்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது பெண்களுக்கு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இனிப்பு உருளைக்கிழங்கு என்றழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கண் பார்வை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். கூடுதலாக, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவை உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது உடலில் ஆற்றலை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது.
இந்த உணவுகள் அனைத்தும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Vaginal yeast infection: யோனி ஈஸ்ட் தொற்றுக்கான காரணங்களும், அதை கையாளும் முறைகளும்!
Image Source: Freepik