Benefits Of Eating Jaggery: பெரும்பாலும் இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது சர்க்கரை தான். இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட பொருள் என்பதால் இதில் எந்த வித ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. மாற்றாக, உடலில் பல்வேறு வித நோய்கள் வருவதற்கு சர்க்கரை காரணமாகிறது. பழங்காலத்தில் சர்க்கரைக்குப் பதில் கரும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெல்லத்தைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். இதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதன் சுவையே ஒரு தனிச்சுவை தான்.
வெல்லம் இயற்கையாகவே உடலுக்குக் குளிர்ச்சி தருவதாக அமைகிறது. வெல்லத்தை எடுத்துக் கொள்வது உடனடி குளிர்ச்சியையும், ஆற்றல் மட்டங்களைத் தூண்டுவதாகவும் அமைகிறது. ஆயுர்வேதத்தில் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் பானம் சிறந்த நன்மைகளைத் தருவதாக அமைகிறது. வெல்லத்தில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் மிகக் குறைந்த அளவிலான கொழுப்புகள் போன்றவை உள்ளன.
வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நீரிழிவு நோயை நிர்வகிக்க
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் உட்கொள்ளலாமா என்ற சந்தேகம் எழும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் போல அல்லாமல் பனை வெல்லம் போன்றவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாகும். இது சர்க்கரையைப் போல அல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் திடீர் அதிகரிப்பைத் தூண்டாது.
இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Foods List: முதுமை எதிர்ப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.?
இரத்த சோகையை குணமாக்க
மோசமான ஹீமோகுளோபின் அளவுகள், கடுமையான சோர்வு, சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படவில்லை எனில் மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். இதற்கு வெல்லம் ஒரு சிறந்த தீர்வாகும். வெல்லம் ஆனது இரும்பின் சிறந்த மூலமாகும்.
எடை இழப்பை ஊக்குவிக்க
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெல்லம் எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. மேலும் தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள் கலோரி நிறைந்த இனிப்புகளைத் தவிர்த்து, சிறிது வெல்லத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இருமல் குணமாக
குளிர் அல்லது கோடை காலம் என எந்த காலமாக இருப்பினும், அனைத்து பருவகால சிரமங்களையும் சமாளிக்க வெல்லம் உதவுகிறது. குளிர்காலத்தில் பல்வேறு சுவாச நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது வெப்ப காலநிலையில் அற்புதமான இயற்கை குளிரூட்டியாக செயல்படுகிறது. வெல்லத்தை சிறிது இஞ்சியுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலம் சளியை வெளியேற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!
செரிமானத்தை அதிகரிக்க
நல்ல குடல் ஆரோக்கியத்துடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வெல்லம் உதவுகிறது. இது மலச்சிக்கல், அஜீரணம், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. தூய தரமான வெல்லம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் உடலில் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதில் சிறுகுடலை ஆதரிக்கிறது.
நல்ல தூக்கத்திற்கு
வெல்லத்தில் அதிக அளவில் செலினியம் நிறைந்துள்ளது. இவை உடலில் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. இரவு நேரத்தில் உணவு வகைகளுடன் வெல்லத்தைச் சேர்த்து எடுத்துக் கொள்வது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைத் தரும்.
PCOS பிரச்சனையைக் கையாள
பாலிசிஸ்டிக் ஓவேரியம் சிண்ட்ரோம் தற்போது எல்லா வயதில் உள்ள பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் பிரச்சனை ஆகும். இது கருப்பை நீர்க்கட்டிகளுக்கு வழிவகுக்கிறது. கடுமையான மனநிலைக் கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறாமை போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். இந்த சிக்கலைத் தவிர்க்க வெல்லம் பெரிதும் உதவுகிறது.
ஒளிரும் சருமத்திற்கு
வெல்லம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேத முறைப்படி, முதுமையின் அறிகுறிகளைத் தவிர்க்க வெல்லம் சிறந்த தேர்வாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சரும சேதத்தை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மெல்லிய கோடுகள், மற்றும் சுருக்கங்களைத் தவிர்க்க வாரத்திற்கு மூன்று முறையாவது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Oats: தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Image Source: Freepik