Expert

Jaggery Benefits: சீனிக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

  • SHARE
  • FOLLOW
Jaggery Benefits: சீனிக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?


Using Jaggery Instead Of Sugar is Healthy: பண்டிகை காலம் வந்துட்டது. பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களுக்கும் இனிப்புகளுக்கும் குறை இருக்காது. சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். என்னதான் இனிப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்றாலும், இது நமது உணர்வாக உள்ளது. நம்மில் பலர் சர்க்கரை ஆரோக்கியமானது அல்ல என்பதால், சர்க்கரைக்கு பதில் வெல்லம் பயன்படுத்தி இனிப்பு பண்டங்களை செய்வோம்.

ஏனென்றால், சர்க்கரை உடல் எடையை அதிகரிப்பதுடன் பல்வேறு உடல் னால பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரையில் கலோரிகள் மிக அதிகம். குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. எனவே தான், பலர் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தால், அது குறைவான தீங்கும் என்ற எண்ணத்தில் அடிக்கடி வெல்லம் பயன்படுத்துகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

ஆனால், உண்மையில் வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பது குறித்து யோகாச்சார்யா மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

சர்க்கரைக்குப் பதில் வெல்லம் பயன்படுத்துவது நல்லதா?

ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூரின் கூற்றுப்படி, “சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைப் பயன்படுத்துவது மிகவும் ஆரோக்கியமானது என்பது தவறான கருத்து. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லத்தில் பல சத்துக்கள் உள்ளது என்பது உண்மைதான். அதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், ஆனால் அதை இனிப்பு ஆரோக்கியமானதாக இருக்க முடியாது". வெல்லம், ஆரோக்கியமாக இருந்தாலும், உங்கள் இனிப்பு பண்டங்களை ஆரோக்கியமாக்க முடியாது என்பதற்கான சில காரணங்கள் கீழே உள்ளன.

இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?

சர்க்கரையைப் போலவே, வெல்லத்திலும் அதிக கலோரிகள் உள்ளன: நீங்கள் வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்டாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் கலோரிகளை அதிகரிக்கும். அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

சர்க்கரை வகை: சர்க்கரையைப் போலவே, வெல்லமும் முக்கியமாக சுக்ரோஸால் ஆனது. உட்கொண்டாலும், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

கிளைசெமிக் இன்டெக்ஸ்: வெல்லம் மற்றும் சர்க்கரை இரண்டும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.

இந்த பதிவும் உதவலாம் : தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?

நிபுணர்கள் கூறுவது என்ன?

ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் கூறுவதாவது, வெல்லம் அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக சர்க்கரைக்கு சற்று சிறந்த மாற்றாக இருந்தாலும், அது உங்கள் இனிப்புகளை ஆரோக்கியமானதாக மாற்றாது.

Pic Courtesy: Freepik

Read Next

ஓட்ஸ் Vs அவல்; எதை காலை உணவாக சாப்பிடுவது நல்லது?

Disclaimer