Benefits of eating neem and jaggery in ugadi: தெலுங்கு, கன்னட மக்கள் கொண்டாடப்படும் உகாதி பண்டிகை புதிய வருடப் பிறப்பைக் குறிப்பதாகும். இந்த தினத்தில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து தெய்வங்களை வழிபட வேண்டும். உகாதி தினத்தை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் சுவையான உணவுமுறைகளைப் படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது மட்டுமல்லாமல் இந்த தினத்தன்று வெல்லம், வேப்பம்பூ உட்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இது குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் சுகாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பொதுவாக, பிரசாதங்கள் இனிப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனவே தான் பண்டிகைகள் மற்றும் சுப நிகழ்வுகளின் போது மக்கள் இனிப்புகளை வழங்குகிறார்கள். பிறகு ஏன் இந்த தினத்தன்று கசப்பான வேம்பு மற்றும் வெல்லம் வழங்கப்படுகிறது தெரியுமா? இது வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் சோகத்தின் நியாயமான பங்கைக் குறிப்பதாகும். ஆனால், உண்மையில், இதைப் பாரம்பரியமாகக் கருதப்பட்டாலும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும். வேம்பு மற்றும் வெல்லம் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைத் தரும் என்பதால் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் இதை உட்கொள்வதை வழக்கமாக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Ugadi 2024: உகாதி முக்கியத்துவம், பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவுகள்…
உகாதி தினத்தில் வேம்பு மற்றும் வெல்லம் சாப்பிடுவது
உகாதி பண்டிகை நாள் முதலே வசந்த காலம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் சூரியனின் பிரகாசம் அதிகரிக்கலாம். இதனால், வளிமண்டலம் வறண்டதாகவும், வெப்பமாகவும் மாறக்கூடிய காலநிலையாக மாறுகிறது. மேலும், இதன் காரணமாக உடலில் பித்தத்தின் உள்ளடக்கமும் அதிகரித்து காணப்படும். இதன் காரணமாக, மக்கள் வாய் புண்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று கோளாறுகள், அதிகரித்த வியர்வை, அரிப்பு, படை நோய், நெஞ்செரிச்சல் போன்ற பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகலாம். இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உகாதி தினத்தில் வேம்பு மற்றும் வெல்லம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
வேம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கோடைக்காலத்தில் வேம்பு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
- ஆயுர்வேதத்தில் வேம்பு முக்கிய பங்கு வகிக்கும் மூலிகையாகக் கருதப்படுகிறது. வேப்பிலையில் நிம்பின், நிம்போலைடு, பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே கோடைக்கால பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.
- வேம்பு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சிறந்த மூலிகையாகும். இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. வேப்பங்கொழுந்து அல்லது வேப்பம்பூவை வாயில் மென்று சாப்பிட, வயிற்று உள்ள புழுக்கள் நீங்கும்.
- வேம்பு அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது தசை மற்றும் மூட்டு வலியை நீக்க உதவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம்.
- கோடைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு வேப்ப இலைகள் சிறந்த தீர்வாகும். இவை சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் முகப்பரு, வடுக்கள் மற்றும் தோல் நிற மாற்றத்தைக் குறைக்கலாம்.
- வேப்பிலைகள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையத்தைச் சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம் கண் பார்வை நன்றாக தெரியும்.
- வேப்பிலைகள் உடல் வெப்பநிலையைக் குறைக்கும் தன்மை கொண்டவையாகும். இதை கோடைக்காலத்தில் எடுத்துக் கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Jaggery Health Benefits: தினமும் வெல்லம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?
கோடையில் வெல்லம் சாப்பிடுவதன் நன்மைகள்
வெல்லம் இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
- வெல்லம் உட்கொள்வது கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, கல்லீரலின் செயல்பாட்டை அதிகரித்து உடல்நலத்தை பேணிப் பாதுகாக்கிறது.
- பனை வெல்லம் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி பல்வேறு நோய்களிடமிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
- வெல்லத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கக் கூடியதாகும். எனவே கோடைக்காலத்தில் சோர்வைக் கண்டால், சிறிது வெல்லம் சாப்பிடுவதை வழக்கமாக்கலாம்.
- இது அதிகளவிலான நீர்ச்சத்துக்களைக் கொண்டதாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது சிறந்த தேர்வாக அமைகிறது.
- வெல்லம் உட்கொள்வது உடலுக்க குளிர்ச்சித் தரக்கூடியதாக அமைகிறது. இது உடல் வெப்பத்தை சீராக வைப்பதன் மூலம் கோடை வெப்பம் சார்ந்த நோயைத் தவிர்க்க உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Neem Leaves Benefits: தலை முதல் கால் வரை… வேப்ப இலை நன்மைகள் இங்கே…
Image Source: Freepik