வெல்லத்தில் உள்ள சத்துக்கள்:
வெல்லத்தில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ போன்ற பல சத்துக்களும் உள்ளன. அதனால் தினமும் ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் முந்திரி சாப்பிடலாமா?
வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
வெல்லம் சாப்பிட்டால் பிபி கட்டுக்குள் இருக்கும். இது நமது உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக வழங்குகிறது. இரத்த சோகையை குறைக்கிறது. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அதிக அளவில் வழங்குகிறது. அதுமட்டுமின்றி மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது. தினமும் ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.
ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு:
வெல்லத்தைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், நம் உடலை சுவாச ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கலாம். மேலும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு, வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணிகள் தினமும் வெல்லம் சாப்பிடுவது, கருவுற்றிருக்கும் குழந்தைக்கும், கருவுற்ற பெண்களுக்கும் நல்லது.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளே! இனிப்பை பார்த்தாலே ஆசையைக் கட்டுப்படுத்த முடியலையா? - இத ட்ரை பண்ணுங்க!
ரத்தத்தை சுத்திகரிக்கும்:
வெல்லத்திற்கு நமது இரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் உண்டு. மேலும், வெல்லம் நமது உடலில் உள்ள இரத்த சோகையை குறைக்கவும் உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு வெல்லம் நன்றாக வேலை செய்கிறது. மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் சிறு வெல்லக்கட்டியைச் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். நம் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் பருக்கள் குறையும். இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் வெல்லம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik