Thu Oct 29, 2026 | 01:43 PM IST

Jaggery Tea Benefits: டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Jaggery Tea Benefits: டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?Jaggery Tea Benefits: டீயில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Is It Safe To Consume Jaggery Tea Daily: குளிர்காலத்தில் நம்மில் பலருக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால், அடிக்கும் குளிருக்கு சூடாக ஏதாவது சாப்பிடும் போது இதமாக இருக்கும். இன்னலையில், நம்மில் பலர் டீயில் சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து குடிப்போம். டீயில் மட்டும் அல்ல, பாயாசம், ஹல்வா, லட்டு அல்லது பால் மற்றும் ரொட்டி செய்வதற்கும் நாம் வெல்லம் பயன்படுத்துவோம்.

வெல்லம் சர்க்கரையை விட ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? வெல்லம் டீ சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால், தினமும் சாப்பிடுவது பாதுகாப்பானதா? அதன் நுகர்வு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துமா? இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Tea Addiction: டீ குடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவரா நீங்க? இதை செய்யுங்க!

தினமும் வெல்லம் டீ குடிப்பது நல்லதா?

நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் வெல்லம் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக, குளிர்காலத்தில் அதை குடிப்பது இன்னும் சிறந்தது. வெல்லம் இயற்கையாகவே, வெப்ப தன்மையைக் கொண்டிருப்பதால், இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளது.

இந்த சத்துக்கள் அனைத்தும் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆனால், நீங்கள் வெல்லம் தேநீரை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இதை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Fig: குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் வெல்லம் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலை டீடாக்ஸ் செய்யும்

வெல்லம் டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, அதன் நுகர்வு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

உடலில் ஆற்றலை பராமரிக்க

வெல்லம் கலந்த டீ உட்கொள்வதும் உடலில் ஆற்றலைப் பராமரிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவும்

வெல்லம் டீ உடலில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கூடுதல் கலோரிகளும் குறையத் தொடங்குகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : Karpooravalli Benefits: இருமல் முதல் இதய நோய்வரை பல பிரச்சினைகளை நீக்கும் ஓமவல்லி இலை!

சளி மற்றும் காய்ச்சல் நீங்கும்

வெல்லம் டீ சூடாக இருப்பதால், சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். இருப்பினும், வெல்லம் கலந்த டீயை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இதை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Basil Tea Benefits: தினமும் 1 கப் துளசி டீ குடிச்சா இந்த பிரச்சனைகள் எல்லாம் வரவே வராது.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.