Fri Sep 11, 2026 | 11:13 PM IST

Doctor Verified

கொய்யா இலையின் 5 அதிசய மருத்துவ நன்மைகள் – மாதவிடாய் வலி முதல் புற்றுநோய் செல்கள் வரை கட்டுப்படுத்தும் இயற்கை மருந்து!

கொய்யா இலையின் முக்கிய சத்துகள், மாதவிடாய் வலி குறைப்பு, சர்க்கரை கட்டுப்பாடு, ரத்த கொதிப்பு, ஜீரண நன்மைகள் மற்றும் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் பயன்கள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம்.

நம் வீட்டு முன் வளரும் ஒரு சாதாரண செடியான கொய்யா மனித உடல்நலத்திற்கு ஆச்சரியமான மருத்துவ நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புரதம், வைட்டமின் பி6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் உள்ளிட்ட பல சத்துகளும், சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் கொய்யா இலையில் காணப்படுகின்றன. துவர்ப்பு சுவை கொண்ட இந்த இலை, மனித உடலில் பல முக்கிய பிரச்னைகளை கட்டுப்படுத்தும் திறன் பெற்றது என ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

1. மாதவிடாய் வலியை 3 மாதங்களில் குறைக்கும் – மருத்துவ ஆய்வு உறுதி

பெண்களுக்கு அதிகம் தொந்தரவு செய்யும் மாதவிடாய் வலி குறைவதில் கொய்யா இலை முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார். மூன்று மாத ஆய்வில், தினமும் 6 மில்லிகிராம் கொய்யா இலை சாறு எடுத்த பெண்களின் வலி தன்மை 8.2 - 7.2 - 6.2 என குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. "வலி மாத்திரைகளை விட இயற்கையான மாற்று தீர்வாக இது செயல்படுகிறது," என அவர் கூறுகிறார்.

Video Link: https://youtu.be/Ab7LW-sr3dc

2. சர்க்கரை அளவை 10% வரை குறைக்கும் – ஜப்பான் ஆராய்ச்சி

ஜப்பானில் நடத்தப்பட்ட சிடியம் கோவா என்ற ஆய்வில், கொய்யா இலைகள் மனிதர்களில் ரத்த சர்க்கரையை 10% வரை குறைக்கும் என கண்டறியப்பட்டது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இது சிறந்த இயற்கை மருந்து என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் காலையில் சுறுசுறுப்பை தரும் 3 சூப்பர் பானங்கள் – ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை 

3. இரத்த கொதிப்பு & கொழுப்பு அளவை இயற்கையாக கட்டுப்படுத்தும்

120 பேரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், கொய்யா இலை சாறு எடுத்தவர்களின் ரத்த கொதிப்பு அளவு 8–9 புள்ளிகள் குறைந்ததாக பதிவாகியுள்ளது.
மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் (LDL) – 10% குறைகிறது, நல்ல கொழுப்புகள் (HDL) – 8% அதிகரிக்கிறது என மருத்துவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

4. ஜீரண சக்தியை அதிகரிக்கும் நார்ச்சத்து

கொய்யா இலையில் அதிகமாக உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகளை சரிசெய்வதில் உதவுகிறது. ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட மருத்துவர்கள் இயற்கை நார்ச்சத்தான கொய்யா இலை சாற்றை பரிந்துரைக்கின்றனர்.

5. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 4 மடங்கு தடுக்கிறது

கொய்யா இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் உருவாகும் செல்களைத் தடுக்கின்றன. சில ஆய்வுகளில் இந்த இலை புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை 4 மடங்கு குறைக்கிறது என்று தெரியவந்துள்ளது. மேலும், முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைத் தடுத்து, தோலை பொலிவாக மாற்றும் தன்மையும் உள்ளது.

இறுதியாக..

கொய்யா இலை ஒரு சாதாரண தாவர சத்து அல்ல; உடலின் பல முக்கிய பிரச்னைகளை இயற்கையாக கட்டுப்படுத்தும் மருத்துவ சக்தியைக் கொண்ட ஒன்று. மாதவிடாய் வலி, சர்க்கரை, இரத்த கொதிப்பு, ஜீரணம், புற்றுநோய் செல்கள் போன்ற சிக்கல்களுக்கு இது சிறந்த இயற்கை மருந்தாக அமைகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தகவல்கள் மற்றும் நாங்கள் பேசிய நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்த முன், தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரை அணுகவும்.

Read Next

குளிர்காலத்தில் காலையில் சுறுசுறுப்பை தரும் 3 சூப்பர் பானங்கள் – ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 02, 2025 12:06 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content