Fri Sep 11, 2026 | 09:30 PM IST

Doctor Verified

நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்கும் போது செய்யக்கூடாத பெரிய தவறுகள்.. நிபுணர் எச்சரிக்கை.!

நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்க முயற்சிக்கும்போது சில பொதுவான தவறுகள் செய்வது வழக்கம். உணவை தவிர்ப்பது, நார்ச்சத்து குறைவு, GI உணவுகளை கவனிக்காமை போன்ற பிழைகள் எடை குறைக்க தடையாகின்றன என டாக்டர் பிரபாத் குமார் விளக்குகிறார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பது ஒரு சவாலான விஷயம். காரணம், அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் (metabolism) குறைந்து, கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கும். “நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றாவிட்டால், எடை குறைப்பதற்குப் பதிலாக எடை கூடும்” என்று நொய்டா கைலாஷ் மருத்துவமனை உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரபாத் குமார் கூறுகிறார்.

எடை குறைக்கும் போது நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய தவறுகள்

உணவைத் தவிர்ப்பது – பெரிய தவறு

பலர் “உணவை தவிர்த்தால் எடை குறையும்” என நினைப்பது தவறான நம்பிக்கை. “நீரிழிவு நோயாளி உணவை தவிர்க்கும்போது இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறையும். பின்னர் அவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இது எடை அதிகரிக்க வழிவகுக்கும்” என்று டாக்டர் பிரபாத் குமார் கூறுகிறார். இதனை தவிர்க்க சிறு அளவில், ஆனால் சீரான இடைவெளிகளில் உணவு உட்கொள்ள வேண்டும்.

Main

பதப்படுத்தப்பட்ட ‘டயபடிக்’ உணவுகள்

சந்தையில் “Diabetic Friendly” எனக் கூறப்படும் பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்மையில் மறைமுகமாக சர்க்கரை மற்றும் சோடியம் நிறைந்தவை. “இவை எடை குறைக்கும் பதிலாக, இரத்த சர்க்கரை ஏற்றத்தையும் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்” என நிபுணர் எச்சரிக்கிறார். இதற்கு பதிலாக, புதிய காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்யுங்கள்.

உணவு அளவை கவனிக்காதது

நீரிழிவு நோயாளிகள் கூட உணவு அளவை கடைபிடிக்காமல் அதிகமாக சாப்பிடுவது ஒரு பெரிய பிழை. அதிக அளவு உணவு உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும், இதனால் இன்சுலின் உற்பத்தி கூடும். இது எடை இழப்பை தடுக்கிறது. இதனை தடுக்க உணவின் அளவை தட்டில் அளவிட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் – ஆயுர்வேத நிபுணர் எச்சரிக்கை! பாதுகாப்பான வழி இதோ

நார்ச்சத்து (Fiber) குறைவாக உட்கொள்வது

நீரிழிவு நோயாளிகளில் மலச்சிக்கல் பொதுவான பிரச்சனை. “நார்ச்சத்து குறைவால் செரிமானம் பாதிக்கப்படுகிறது, இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கின்றன,” என டாக்டர் பிரபாத் கூறுகிறார். இதனை தடுக்க கீரைகள், அவல், ராகி, சியா விதைகள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளவும்.

கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) உணவுகளை கவனிக்காதது

GI (Glycemic Index) என்பது உணவு இரத்த சர்க்கரையை எவ்வளவு வேகமாக உயர்த்துகிறது என்பதை அளவிடும் அளவுகோல். உயர் GI உணவுகள் (அரிசி, வெள்ளை ரொட்டி, இனிப்பு பொருட்கள்) உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் எடை குறையாது, மாறாக கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கும். இதனை தடுக்க சரியான வழி, பச்சை காய்கறிகள், பருப்பு, ஓட்ஸ், சோளம் போன்ற குறைந்த GI உணவுகளை உட்கொள்ளவும்.

நிபுணர் பரிந்துரை: எடை குறைப்பு சுலபமாக அமைய வேண்டுமென்றால்

* இரத்த சர்க்கரை நிலையை கண்காணிக்கவும்

* உணவில் சீரான புரதம், நார்ச்சத்து சேர்க்கவும்

* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யவும்

* போதிய நீர் குடிக்கவும்

* போதுமான உறக்கம் பெறவும்

“உணவு பழக்கத்தை மாற்றுவது நீரிழிவு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என டாக்டர் பிரபாத் கூறுகிறார்.

symptoms-causes-and-prevention-of-type-3c-diabetes-main

இறுதியாக..

நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பது சாத்தியமற்றது அல்ல, ஆனால் சரியான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். உணவை தவிர்ப்பதும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான நம்பிக்கையும், நார்ச்சத்து புறக்கணிப்பும் மிகப்பெரிய பிழைகள். நீங்கள் உண்மையில் எடை குறைக்க விரும்பினால், மருத்துவரின் ஆலோசனையுடன் சீரான உணவு முறையையும் உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் பகிர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைவருக்கும் பொருந்தாமல் இருக்கலாம். எந்தவொரு உணவு மாற்றத்தையும் மேற்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் நீரிழிவு கட்டுப்பாட்டில்! – மருத்துவர் அறிவுறுத்தல்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 11, 2025 19:52 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content