Fri Sep 11, 2026 | 11:24 PM IST

Doctor Verified

கரும்புள்ளிகளைப் போக்க விரும்புகிறீர்களா.? தெளிவான சருமத்திற்கு இந்த 3 சியா விதை ஃபேஸ் பேக்குகளை முயற்சிக்கவும்..

கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் மற்றும் சீரற்ற சரும நிறத்தை குறைக்க சியா விதை ஃபேஸ் பேக்குகள் மிகவும் பயனுள்ளதாகும். கற்றாழை, தயிர், தேன் சேர்த்து செய்யும் 3 இயற்கை பேக்குகள் சருமத்தை ஒளிரச் செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரீம்கள், சீரம்கள் போன்ற தயாரிப்புகள் தற்காலிகமாக உதவினாலும், சிலவற்றில் உள்ள ரசாயனங்கள் நீண்ட காலத்தில் சருமத்தை சேதப்படுத்தக்கூடும். இயற்கை முறைகள் தேடுபவர்களுக்கு சியா விதைகள் ஒரு சிறந்த தீர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சியாவில் உள்ள ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள், புரதம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகள் சருமத்தை ஆழமாகச் சீரமைத்து, கரும்புள்ளிகளை ஒளிரச் செய்ய உதவுகின்றன. இதுகுறித்து ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் ஆலோசகர் தோல் நிபுணர் டாக்டர் ஷெரின் ஜோஸ் விளக்கமளித்தார்.

1. சியா விதைகள் + கற்றாழை ஃபேஸ் பேக்

தேவையானவை:

  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் புது கற்றாழை ஜெல்

செய்முறை:

சியா விதைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15–20 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.

நன்மைகள்:

  • சியா விதைகள் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கும்
  • கற்றாழை அழற்சியை குறைத்து முகப்பரு வடுக்களை அமைதப்படுத்தும்
  • உணர்திறன் அதிகமான மற்றும் வறண்ட சருமத்திற்கு சிறந்தது

இந்த பதிவும் உதவலாம்: அவுரி பொடி சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நரை குறையும்! மருத்துவர் சொல்வது என்ன?

2. சியா விதைகள் + தயிர் ஃபேஸ் பேக்

தேவையானவை:

  • 1 டீஸ்பூன் ஊறவைத்த சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் தயிர்

செய்முறை:

இரண்டையும் கலந்து முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவவும்.

நன்மைகள்:

  • தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும்
  • சியா விதைகள் சரும நிறத்தை சமப்படுத்தி கரும்புள்ளிகளை குறைக்கும்
  • மந்தமான, பழுப்பு நிறம் கொண்ட சருமத்திற்கு சிறந்தது

3. சியா விதைகள் + தேன் ஃபேஸ் பேக்

தேவையானவை:

  • 1 டீஸ்பூன் சியா விதைகள்
  • 1 டீஸ்பூன் தேன்

செய்முறை:

முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவவும்.

நன்மைகள்:

  • தேன் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்
  • பாக்டீரியா குறைந்து முகப்பரு தடுப்பு அதிகரிக்கும்
  • சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் திசுக்களைச் சீரமைக்க உதவுகின்றன

இறுதியாக..

இந்த மூன்று சியா விதை ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஆழமாக ஊட்டமளிக்கப்படுகிறது; கரும்புள்ளிகள் படிப்படியாக மங்கியதுடன், முகத்துக்கு இயற்கையான ஒளிர்வு கிடைக்கிறது. ரசாயனங்களின்றி, முழுக்க இயற்கை வழியால் சரும பிரகாசத்தை பெற விரும்புபவர்கள் இதனை முயற்சி செய்யலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொது தளங்களில் வெளியிடப்பட்ட மருத்துவ நிபுணர் பேச்சுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. எந்தவொரு முகக்கருத்தையும் பயன்படுத்தும் முன் உங்கள் தோல் நிபுணர் அல்லது குடும்ப மருத்துவரை ஆலோசிக்கவும்.

Read Next

காலை எழுந்ததும் வீங்கிய முகமா? இதிலிருந்து விடுபட ஹார்மோன் சமநிலைப்படுத்தும் டிடாக்ஸ் டீ குடிங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 26, 2025 19:59 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content