Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

ஞாபக சக்தி அதிகரிக்க இந்த கீரை சாப்பிடுங்க.. மருத்துவர் பரிந்துரை..

இன்றைய வாழ்க்கை முறையால் ஏற்படும் ஞாபக மறதியை குறைக்க வல்லாரை கீரை, மஞ்சள், ஜின்கோ பிலோபா உள்ளிட்ட இயற்கை வழிகளை டாக்டர் கார்த்திகேயன் விளக்குகிறார். 

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக பலரும் ஞாபக மறதி பிரச்சனையை சந்தித்து வருவதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு மருந்துகளைத் தவிர, வீட்டிலேயே எளிய இயற்கை வைத்திய முறைகளை பின்பற்றலாம் என்றும் அவர் கூறுகிறார்.

மூளை ஆரோக்கியத்திற்கு வல்லாரை கீரை

ஞாபக மறதியை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான இயற்கை மூலிகையாக வல்லாரை கீரை விளங்குகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார். வல்லாரை கீரை மூளை செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும்.

மன அழுத்தம், பதற்றம் குறையும்

வல்லாரை கீரை ஞாபக மறதியை மட்டுமின்றி, பதற்றமான மனநிலையையும் குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தை தணித்து, அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதோடு, நல்ல உறக்கம் வருவதற்கும் இது துணைபுரிகிறது.

கவனக்குவிப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவி

படித்ததை மீண்டும் நினைவில் கொள்ளும் திறன், கவனக்குவிப்பு மற்றும் சிந்தனைத் திறனை வல்லாரை கீரை மேம்படுத்துகிறது. மேலும், முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் பண்புகள் இதில் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவிக்கிறார். எனவே, ஞாபக மறதி இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் அன்றாட உணவில் வல்லாரை கீரையை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குறைந்த இரத்த சர்க்கரையால் இந்த பிரச்சனை உங்களுக்கு வரலாம்.. தடுக்க உதவும் குறிப்புகள் இதோ! மருத்துவர் பரிந்துரை

மஞ்சள் மற்றும் ஜின்கோ பிலோபா

வல்லாரை கீரையைப் போலவே, மஞ்சள் கூட நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற இயற்கை சேர்மம் மூளை செல்களை பாதுகாக்கிறது. அதேபோல், ஜின்கோ பிலோபா என்ற மூலிகை நினைவாற்றலை மேம்படுத்தவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது.

தூக்கம், மன அழுத்தம் – முக்கிய காரணிகள்

சீரான உறக்கம் இல்லாதது நினைவாற்றலை கடுமையாக பாதிக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார். மன அழுத்தம் அதிகரிக்கும் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகரித்து, ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது.

தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்

  • அதிக அளவில்
  • காபி குடிப்பது
  • மதுபானம் அருந்துவது

இவை அனைத்தும் நினைவாற்றலை குறைக்கும் காரணிகளாகும். அதேபோல், வைட்டமின் B12 குறைபாடு கூட ஞாபக மறதியை ஏற்படுத்தும் என்பதால், அதனை சரி செய்வதும் அவசியம்.

இறுதியாக..

ஞாபக மறதி என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளம் தலைமுறையையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. உணவு, தூக்கம், மனநிலை மற்றும் இயற்கை மூலிகைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், ஞாபக மறதியை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, வல்லாரை கீரை போன்ற பாரம்பரிய உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு பெரும் துணையாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளங்களில் மற்றும் நிபுணர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

உண்மையில் ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அப்ப உங்க டயட்ல இப்படி சேர்த்துக்கோங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 24, 2025 12:25 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content