Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Doctor Verified

BP கண்ட்ரோல்ல இருக்க.. இத மட்டும் சாப்பிடுங்க.! மருத்துவர் பரிந்துரை..

High BP-யை மருந்தில்லாமல் இயற்கையாகக் குறைக்க உதவும் 5 முக்கிய உணவுகளை ஹார்வார்டு & ஸ்டான்ஃபோர்டு பயிற்சி பெற்ற டாக்டர் சௌரப் சேதி பரிந்துரைக்கிறார். வாழைப்பழம் முதல் பீட்ரூட் வரை – இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது Hypertension என்பது “அமைதியான கொலைகாரன்” என்று அழைக்கப்படுகிறது. காரணம் – இது எந்த அறிகுறியும் காட்டாமல் இதயம், மூளை, சிறுநீரகம் ஆகியவற்றைக் gradually பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, உலகளவில் 1.4 பில்லியன் பேர் உயர் இரத்த அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். இந்த நிலையில், இயற்கையாக BP-யை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை ஹார்வார்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பயிற்சி பெற்ற செரிமான நிபுணர் Dr. Saurabh Sethi தனது Instagram வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் உணவுகள்

வாழைப்பழம்

வாழைப்பழம் உயர் BP-யை குறைக்க உதவும் சிறந்த பழம். டாக்டர் சேதி கூறுவதுபடி, வாழைப்பழத்தில் உள்ள Potassium, சிறுநீரகத்தை Excess Sodium-ஐ வெளியேற்ற உதவி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஒரு ஆய்வின்படி, potassium அதிகம் + sodium குறைவு கொண்ட உணவு BP-யை மிகச் சிறப்பாகக் குறைக்கிறது.

டார்க் சாக்லேட்

70% காக்கோவும் அதற்கு மேற்பட்ட டார்க் சாக்லேட்டில் உள்ள Magnesium + Flavanols, உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரித்து ரத்தக் கொட்டகைகளை தளரச் செய்கிறது. இதனால் BP இயற்கையாகக் குறைகிறது. ஆனால், மிதமான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள Organic Nitrates, உடலில் Nitric Oxide-ஆக மாறி ரத்தக் கொட்டகைகளை விரிவாக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி BP-யை குறைக்கிறது. பீட்ரூட் ஜூஸ், ஸ்மூத்தி அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா.? டாக்டர் சிவராமன் விளக்கம்..

மாதுளை

மாதுளையில் உள்ள பாலிபினால்கள், ஆஞ்சியோடென்சின்-மாற்றும் நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. 2017 ஆய்வு ஒன்றின்படி, மாதுளை ஜூஸ் — குறுகிய & நீண்ட காலத்திலும் BP-யை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டது.

இஞ்சி

இஞ்சி ஒரு அருமையான உணவாக செயல்படுகிறது. அதாவது ரத்தக் கொட்டகைகளை தளரச்செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சாறுகள், சூப், டீ, சாலட், ஸ்டிர் ஃப்ரை ஆகியவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

உயர் ரத்த அழுத்தம் நீண்ட காலத்துக்கு இதய மற்றும் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கக்கூடியது. வாழைப்பழம், பீட்ரூட், மாதுளை, டார்க் சாக்லேட் மற்றும் இஞ்சி போன்ற இயற்கை உணவுகள் BP-யை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் கட்டுப்படுத்த உதவும். இதை சீரான உடற்பயிற்சி, குறைந்த உப்பு, போதிய தூக்கம் ஆகியவற்றுடன் இணைத்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை கல்வி நோக்கத்திற்கான தகவல் பகிர்வு மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. உங்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ வரலாற்றைப் பொருத்து உணவு அல்லது மருந்து மாற்றங்களுக்கு முன் மருத்துவரை அணுகவும்.

Read Next

மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெற.. இந்த பழங்களை சாப்பிடுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 20, 2025 10:42 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content