Fri Sep 11, 2026 | 10:45 PM IST

Doctor Verified

இரத்த சோகை வர இரும்புச்சத்து குறைபாடு மட்டுமல்ல.. இதுவும் காரணமா இருக்கலாம்

மக்கள், பெரும்பாலும் இரத்த சோகையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பலரும் இதற்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், இன்னும் பிற காரணிகளாலும் ஏற்படலாம். இதில் இரத்த சோகை ஏற்படுவதற்கு இரும்புச்சத்தை தவிர, வேறு என்ன காரணங்கள் இருக்கலாம் என்பது குறித்து காணலாம்.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் வேலைப்பளு மற்றும் இன்னும் பல்வேறு காரணங்களால், பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக இரும்புச்சத்து குறைபாடு அமைகிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக, ஒருவருக்கு இரத்த சோகை ஏற்படலாம். பொதுவாக, இரும்புச்சத்து உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, இரத்த சோகை உள்ளவர்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்த இதுவே காரணம் என நினைக்கின்றனர். இருப்பினும், இது உண்மையல்ல.

இரத்த சோகை இரும்புச்சத்து குறைபாட்டால் மட்டுமல்ல. இன்னும் பல்வேறு காரணிகளாலும் ஏற்படலாம். இரத்த சோகை காரணமாக, நாள் முழுவதும் சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், வெளிர் தோல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதில் இரும்புச்சத்து குறைபாட்டைத் தவிர வேறு என்ன காரணங்கள் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். என்பது குறித்து நொய்டாவின் பெலிக்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவம் டாக்டர் அன்ஷுமாலா சின்ஹா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் இரத்தம் உற்பத்தி ஆக மறக்காமல் இந்த பட்ஜெட் விலை உணவை சாப்பிடுங்கள்!

இரத்த சோகைக்கான காரணங்கள் என்ன?

ஊட்டச்சத்து குறைபாடுகள்

இரும்புச்சத்து குறைபாடு பெரும்பாலும் இரத்த சோகைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. வைட்டமின் பி12, தாமிரம் மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் குறைபாடு காரணமாகவும் ஏற்படக்கூடும். இந்த ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள் இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கிறது.

கடுமையான நோய்கள் காரணமாக 

ஒருவருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்களின் உடலில் இரத்த சிவப்பணு உற்பத்தி குறையக்கூடும். இதன் காரணமாகவும், அவர்களுக்கு இரத்த சோகையை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

குடல் சுகாதார பிரச்சினைகள்

பல நேரங்களில் மக்கள்குடல் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதில், இரத்த சோகை பின்வரும் காரணங்களாலும் ஏற்படலாம். அதாவது, குடல் தொடர்பான எந்தவொரு நோயும் குடலில் ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல் போக வழிவகுக்கக்கூடும். இது இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வயதானதற்கான காரணங்கள்

பொதுவாக, மக்கள் வயதாகும் போது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது தவிர, உறுப்பு செயலிழப்பு மற்றும் நோய் காரணமாகவும், இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும். அதிலும் குறிப்பாக, இரத்த சோகைக்கான ஆபத்து பெரும்பாலும் வயதாகும்போது அதிகரிக்கிறது.

அதிக இரத்தப்போக்கு காரணமாக

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது நீடித்த இரத்தப்போக்கு பிரச்சனைகளைப் பெண்கள் சிலர் சந்திக்கின்றனர். ஆனால், இவ்வாறு அதிக இரத்தப்போக்கு ஏற்படுவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது இது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை அபாயத்தை அதிகரிக்கலாம்.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரும்பாலும் இரத்த சோகை பிரச்சனை ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த அபாயத்தைக் குறைக்க, பெண்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து கொண்ட மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து குறைபாட்டால் ஏன் சோர்வு ஏற்படுகிறது? சரியாக எந்த உணவுகள் சாப்பிடலாம்?

மரபியல் காரணமாக

சில நேரங்களில் ஒரு நபருக்கு குடும்ப வரலாறு இருக்கலாம் அல்லது இரத்தப்போக்கு கோளாறுகள் இருக்கலாம். இந்தப் பிரச்சனை இருப்பது அவர்களுக்கு இரத்த சோகையின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

முடிவுரை

இதில் குறிப்பிட்ட படி, இரும்புச்சத்து குறைபாட்டால் மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, ஃபோலேட் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள், கர்ப்பம், குடல் உடல்நலப் பிரச்சினைகள், மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, மரபியல் காரணமாக, வயதாகும் போது, சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் போன்ற காரணங்களாலும் மக்கள் இரத்த சோகை பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். எனவே, இரத்த சோகையின் அறிகுறிகளைப் புறக்கணிக்காமல், உடனே மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: எந்த சப்ளிமெண்ட்டும் இல்லாம இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் இயற்கையான வழிகள்..

Image Source: Freepik

Read Next

கண் முக்கியம் பாஸ்.. பட்டாசு வெடிக்கும் போது கண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 18, 2025 21:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content