
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பொதுவான நோயாக இரத்த சோகை அமைகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் ஒருவர் திடீரென சோர்வடைந்தால், அது இரத்த சோகையாக இருக்கும் என எளிதில் கண்டறிந்து விடுவர். அது மட்டுமல்லாமல், அதற்கான சிகிச்சை முறையாக என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் கூறிவிடுவர். அந்த அளவுக்கு இந்த நோய் பொதுவாக காணப்படும் நோயாகும்.
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் வரக்கூடிய அனிமியா பெரும்பாலானோர் பாதிக்கப்படும் நோயாகும். இந்த இரும்புச்சத்து குறைபாட்டு குறித்தும், அதனால் ஏன் சோர்வு ஏற்படுகிறது மற்றும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என பல்வேறு தகவல்களை டென்ட்ஷைன் பல் மருத்துவமனையின் மருத்துவர் பி. சிவக்குமார் எம்.டி.எஸ் தனது யூடியூப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து குறைபாடு: இந்த அறிகுறிகளை எக்காரணம் கொண்டும் புறக்காணிக்காதீர்கள்!
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏன் சோர்வு ஏற்படுகிறது?
நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை உடலில் எல்லா அணுக்களுக்கும் கொண்டு செல்ல உதவுவது ரெட் பிளட் செல்ஸ் எனப்படும் இரத்த சிவப்பணுக்கள் தான். இது எப்படி ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது தெரியுமா? இரத்த சிவப்பணுக்களில் காணப்படக்கூடிய ஹீமோகுளோபின் நம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை வாங்கும். இதன் மூலம், இந்த சிகப்பு அணுக்கள் எல்லா அணுக்களுக்கும் ஆக்ஸிஜனை சேர்க்கிறது. இந்த ஹீமோகுளோபின் உருவாவதற்கு நமக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
இந்நிலையில், நம் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும் போது ஹீமோகுளோபின் உருவாகும் வாய்ப்பும் குறைவு. இதனால், இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது கடினமானதாக இருக்கும். இதன் காரணமாகவே, நாம் பெரும்பாலும் சோர்வடைகிறோம். சிறிது வேலை செய்தால், மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்றவை அறிகுறிகளும் தோன்றலாம். இது தவிர, இரும்புச்சத்துக்கள் நமக்கு எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நம் உடலுக்கு இரும்புச்சத்துக்கள் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், இவை உடலில் நடக்கும் பல எதிர்வினைகளுக்கு உதவுகிறது. மேலும், புதிய அணுக்கள் உருவாகுவதற்கும், அந்த அணுக்கள் வளர்வதற்கும் அதாவது செல் டிஃபரன்ஷியேஷன் என்று கூறலாம். இவை அனைத்திற்கும் இரும்புச்சத்து முக்கியமாகும். அது மட்டுமல்லாமல், dna என்று சொல்லப்படும் மரபணு உருவாகுவதற்கு நமக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச்சத்து யார் யாருக்கு எவ்வளவு தேவை என்பதை இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் படி மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
நம் உடலில் இரும்புச்சத்து அளவுகள் ஆண், பெண் வாரியாகவும், வயது வாரியாகவும் வித்தியாசப்படும். பொதுவாக, பெண்களுக்கு எப்போதுமே இது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், மாதவிடாயின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால் அவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் முக்கியமாகும். அதே சமயம், கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகளவு தேவை. எனவே தான் பெண்களுக்கு எப்போதும் அதிக இரும்புச்சத்து தேவை எனக் கூறப்படுகிறது.
வகைகள்
ஹீம் இரும்பு: இது அசைவ உணவுகளில் மட்டும் காணப்படக்கூடியதாகும்.
ஹீம் அல்லாத இரும்பு: இது சைவ உணவுகளில் காணப்படும் இரும்புச்சத்து ஆகும்.
முட்டையைப் பொறுத்தவரை ஹீம் இரும்பு, ஹீம் அல்லாத இரும்பு இரண்டும் இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இரும்புச்சத்து உள்ள அசைவ உணவுகள் (ஹீம் உணவுகள்)
மருத்துவரின் கூற்றுப்படி, அசைவ உணவுகளில் உள்ள இரும்புச்சத்துக்களாக
கோழி ஈரல் - 899 mg
ஆட்டு ஈரல் - 737 mg
ஆட்டுக்கறியில் - 476 mg
நெத்திலி மீன் - 325 mg
ஷீலா மீன் - 19 mg
முட்டை - 175 mg,
காணாங்கெழுத்தி மீன் - 163 mg என்ற அளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Low Iron Levels: உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் வரும்!
இரும்புச்சத்து உள்ள சைவ உணவுகள் (ஹீம் அல்லாத உணவுகள்)
கீரை வகைகளில் உள்ள இரும்புச்சத்துக்கள்
100 g முளைக்கீரை - 38 mg
அரைக்கீரை - 23 mg
மணத்தக்காளி கீரை - 20 mg
கொத்தமல்லி - 18 mg
புதினா - 16 mg
பருப்புக்கீரை - 15 mg
lack-of-iron-cause-hairfall
விதைகளில் உள்ள இரும்புச்சத்துக்கள்
100 g எள் - 146 mg
கசகசா - 976 mg
பூசணி விதை - 9 mg
சியா விதை - 772 mg
ஆளி விதை - 56 mg
நட்ஸ் வகைகளில் உள்ள இரும்புச்சத்துக்கள்
100 g முந்திரி - 68 mg
பாதாம் - 48 mg
பிஸ்தா - 392 mg
வேர்க்கடலை - 392 mg
வால்நட்ஸ் - 291 mg
இது போன்ற பல்வேறு உணவுகளில் காணப்படும் இரும்புச்சத்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இதில் இரும்புச்சத்து நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்னென்ன என்பதையும் குறித்து மருத்துவர் பரிந்துரைத்ததைப் பார்த்தோம். எனவே இரும்புச்சத்தின் தேவையைப் புரிந்து கொண்டு அன்றாட உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Nutrient Deficiency: உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது இதுதான் நடக்கும்!
Image Source: Freepik
Read Next
குடல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version