Health Benefits Of Brown Rice: பொதுவாக அரிசி வகைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அமைப்பிலும், ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையிலும் வேறுபடுகின்றன. பாரம்பரியமாக, அரிசியை உமியுடன் எடுத்துக் கொள்வர். ஆனால், காலப்போக்கில் உமி நீக்கப்பட்ட வெள்ளை அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், பிரவுன் அரிசி ஆனது பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான முழு தானியமாகும். பிரவுன் அரிசி தயாரிப்பானது உமி நீக்கப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்படாத அரிசி ஆகும். இது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகமாக வைக்க உதவுகிறது.
பழுப்பு அரிசி ஊட்டச்சத்துகள்
பழுப்பு அரிசி அல்லது பிரவுன் அரிசி ஊட்டச்சத்து அளவானது வெள்ளை அரிசியை விட ஆரோக்கியமானதாகும். இந்த அரிசி கொழுப்பு, கலோரி மற்றும் பசையம் இல்லாததாகும்.
பழுப்பு அரிசியில் துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் பி1, பி2, பி3, மற்றும் பி6, வைட்டமின் ஈ, மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும், இதில் ஃபிளவனாய்டுகள், புரதங்கள், மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Foods List: முதுமை எதிர்ப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.?
பழுப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்
பிரவுன் அரிசி வெள்ளை அரிசி போல சுவையாக இல்லாமல் இருப்பினும், பழுப்பு அரிசி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு
மகப்பேறுக்குப் பிறகு, தாய்மார்களுக்கு பெரும்பாலும் மனச்சோர்வு ஏற்படலாம். இந்த நிலையில், பெண்கள் பிரவுன் அரிசி எடுத்துக் கொள்வது மனச்சோர்விலிருந்து விடுபட வைக்கிறது. இந்த அரிசியை எடுத்துக் கொள்வது மனநிலை, மனச்சோர்வு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பிரவுன் அரிசி உதவுகிறது. இதில் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், உட்கொள்ளும் உணவு மெதுவாக ஜீரணமாகி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய பாலிபினால்கள் இருப்பதால் இவை சர்க்கரையை மெதுவாக வெளியிட உதவுகின்றன.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த
பழுப்பு அரிசியில் உள்ள எண்ணெய் ஆனது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை பெரிதளவு குறைக்கிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன. இவை கொலஸ்ட்ராலை பிணைத்து, அதை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!
உடல் எடை குறைய
உடல் எடையைக் குறைக்க பயன்படும் பிரபல உணவுகளில் ஒன்றாக பிரவுன் அரிசி உள்ளது. இதற்கு இதில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, குறைந்த கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. மேலும், இது தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது.
செரிமான மேம்பாட்டிற்கு
செரிமான அமைப்பை மேம்படுத்த தினசரி உணவில் சேர்க்கக் கூடிய பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக பிரவுன் அரிசி உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பெருங்குடல் அழற்சி மற்றும் மலச்சிக்கல்லைக் குணப்படுத்த பிரவுன் அரிசி சிறந்த தேர்வாக அமைகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
பழுப்பு அரிசியில் கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், பிரவுன் அரிசி எடுத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது.
நரம்பியல் பாதுகாப்பிற்கு
இந்த அரிசி அறிவாற்றல் செயலிழப்பு மற்றும் நரம்பியல் கடத்தல் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை தருகிறது. இவை மனச்சோர்வு, பதற்றம் அல்லது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
Image Source: Freepik