Fri Sep 11, 2026 | 11:42 PM IST

Expert

உணவு சாப்பிட்ட பிறகு சுகர் சாப்பிட ஆசையா? இது ரொம்ப ஆபத்து.. இதை நிர்வகிக்க உதவும் 5 எளிய குறிப்புகள் இதோ

சர்க்கரையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இதில் உணவுக்குப் பின் சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

பொதுவாக, இனிப்புப் பொருள்கள் சாப்பிடுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, இனிப்பு சாப்பிடுவதை விரும்புகின்றனர். ஆனால், அதை சரியான அளவு எடுத்துக் கொள்ளும் வரை நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இதை அதிகளவு எடுத்துக் கொள்வதால் நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் இனிப்பு அல்லது சர்க்கரை நிறைந்த சிற்றுண்டி சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.

உண்மையில், இது சர்க்கரை ஏக்கத்தை அதிகமாக உணரக்கூடும். இதனால், அந்த கூடுதல் இனிப்புப் பண்டத்தை எதிர்ப்பது சவாலாக இருக்கும். ஆனால், அந்தச் சுழற்சியை உடைத்து, பசியின் மீது மீண்டும் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும். இதில் உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய சர்க்கரை பசியைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரும், ஊட்டச்சத்து நிபுணருமான மருத்துவர் மன்பிரீத் கல்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: 

சாப்பிட்ட உடனே உங்களுக்கு ஏதாவது ஏங்குகிறதா?

உணவு உட்கொண்ட பிறகு எதாவதொரு இனிப்புப் பொருளை சாப்பிட ஏங்குவது குறித்து நிபுணர் தனது பதிவில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அது வெறும் இனிப்புப் பண்டமல்ல - அது இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாக இருக்கலாம், நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டம் என்று

உங்கள் உடல் இன்சுலினுக்கு உணர்திறன் குறைவாக இருக்கும்போது, உணவில் இருந்து வரும் சர்க்கரை உங்கள் செல்களை சரியாகச் சென்றடையாது.

உங்கள் மூளை உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருப்பதாக நினைத்து சர்க்கரைக்கான ஏக்கத்தைத் தூண்டும்!

எனவே அடுத்த முறை மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு இனிப்புகளை வாங்கும்போது - உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள், உங்கள் ஆசைகளைக் கேட்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது வீடியோ பதிவில் கூறியதாவது, உணவுக்குப் பிறகு சர்க்கரைக்காக நான் மிகவும் ஏங்குகிறேன். அதனால் நான் வீட்டில் இனிப்பு எதையும் சாப்பிடுகிறேன் என்று எடுத்துரைக்கிறார்.

இது ஏன் நமக்கு நடக்கிறது?

உணவுக்குப் பிறகு சர்க்கரை உட்கொள்ளல் ஏக்கம் அதிகரிப்பானது, இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாக விளங்குகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது.

புரிந்துகொள்வோம்

நிபுணர் இது ஒரு சுழற்சி முறையாகப் பகிர்ந்துள்ளார். அதன் படி,

உணவை உண்ணுவது -> இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது -> கணையம் இன்சுலினை வெளியிடுகிறது -> ஆனால் இன்சுலின் உணர்திறன் குறைவாக இருந்தால் -> மூளை அளவு குறைந்த ஆற்றல் நிலை -> விரைவான சர்க்கரைகளுக்கான ஏக்கம்

எனவே, குறிப்பாக உணவு சாப்பிட்ட பிறகு இனிப்புக்கான இந்த ஏக்கத்தை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உங்கள் ஹார்மோன் ரிப்போர்ட் கார்டு என பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: 

இன்சுலினை சிறப்பாக நிர்வகிக்க 5 குறிப்புகள்:

உணவுக்குப் பிறகு சர்க்கரை உட்கொள்ளல் அதிகரிப்பானது இன்சுலினை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.

ஒவ்வொரு உணவிலும் நார்ச்சத்து சேர்க்க வேண்டும் - இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது.

சாப்பிட்ட பிறகு 10-15 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் - இரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும் - கார்டிசோல் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும்.

நன்றாக தூங்குங்கள் - மோசமான தூக்கம் சர்க்கரை பசியையும் இன்சுலின் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறது.

சமச்சீர் உணவுகளை உண்ணுங்கள் - புரதம் + கார்போஹைட்ரேட்டுகளுடன் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கும்.

View this post on Instagram

A post shared by Dt Manpreet Kalra | Hormone and Gut Health Coach | (@dietitian_manpreet)

குறிப்பு

நிபுணர் பகிர்ந்த இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் இன்சுலினை சிறப்பாக நிர்வகிக்க முடியும். மேலும், சர்க்கரைப் பசியை வெல்வது என்பது நிலைத்தன்மையும் கவனமும் தேவைப்படும் ஒரு செயல்முறையாகக் கருதப்படுகிறது. சிறிய, நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், இனிப்புகளைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்து, சீரான உணவுப் பழக்கத்தை அனுபவிக்கலாம். மிதமான உணவை உட்கொள்வது சரியானது. ஆனால், பசியைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: 

Image Source: Freepik

Read Next

world diabetes day 2025: நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 13, 2025 14:40 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content