Lemon Water is Not Good For Health: நாம் எப்போதும் இயற்கையாக கிடைக்கூடிய பொருட்களை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும் என முழுமையாக நம்புகிறோம். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா? என்பது குறித்து நம்மிடையே எவ்வித விழிப்புணர்வும் கிடையாது. குறிப்பாக இயற்கை மூலிகைகள், வீட்டு வைத்தியம் ஆகியவற்றின் சாதக, பாதகங்கள் குறித்து முழுவதுமாக அறிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக பின்பற்றும் பழக்கம் பலரிடமும் உள்ளது.
குறிப்பாக இன்றைய தலைமுறையில் அனைவரது கையிலும் செல்போன் உள்ளது. உடலில் ஏதாவது சிறு அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனே கூகுளில் சர்ச் செய்து வியாதியை கண்டுபிடித்து, யூடியூப்பில் தேடி பிடித்து மருந்து சாப்பிடும் அளவிற்கு நமக்கு நாமே மருத்துவர்களாகிவிடுகிறோம்.
இன்று அப்படி பலரிடமும் பரவலாக காணப்படும் ஒரு பழக்கம் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிப்பது. இதனால் கிடைக்கக்கூடிய மருத்துவ நன்மைகள் இருந்தாலும், பிரபல இரைப்பைக் குடலியல் மருத்துவரான சௌரப் செந்தி, அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Sinuses Remedies: சைனஸ் வலியால் அவதிப்படுகிறீர்களா?… இந்த உணவை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..!
எலுமிச்சை சாறு உடலுக்கு நல்லதா?
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம், ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய முக்கிய சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல் அணுக்களை தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.
எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை பருகுவது உடல் எடையை குறைப்பது, உடலில் நீரேற்றத்தை அதிகரிப்பது, கொழுப்பை கரைப்பது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது என பல்வேறு நன்மைகளை தருகிறது. நாணயத்தின் இருபக்கங்களைப் போல எலுமிச்சையில் அதிக அளவிலான நன்மைகள் இருப்பதைப் போலவே, 3 முக்கிய தீமைகள் இருப்பதாக மருத்துவர் சௌரப் செந்தி தெரிவித்துள்ளார்.
எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் உள்ள தீமைகள்:
எலுமிச்சையில் அதிக அளவிலான வைட்டமின் சி சத்து உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை தினந்தோறும் பலமுறை குடிப்பதால் உடலுக்கு சில தீமைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர் செளரப் செந்தி எச்சரித்துள்ளார்.
1. பற்கள், குடல் அரிப்பு:
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், நாளை சுறுசுறுப்பாக்கவும் உதவுகிறது.
ஐரோப்பிய மருத்துவ இதழ் ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வின் படி, “உணவு சாப்பிடும் போதும் இரண்டு டம்பளர் தண்ணீர் குடிப்பது பசி, உணவின் அளவை குறைக்க உதவும்” எனக்கூறப்பட்டுள்ளது. அதுவே எலுமிச்சை சாறு கலந்த நீரை பருகும் போது செரிமானத்தை சீராக்கி, கலோரியை எரித்து எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஆனால் மக்கள் இங்கு தான் தவறு செய்வதாக மருத்துவர் செளரப் செந்தி கூறுகிறார். எலுமிச்சை சாறு கலந்த நீரை தினமும் ஒருமுறை குடிப்பதால் எவ்வித பிரச்சனையும் கிடையாது. ஆனால் தினந்தோறும் பலமுறை அருந்தும் போது, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்கள் மற்றும் குடலில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: Chia Seed Water Side Effects: தினமும் சியா விதை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?
2. இதை மறந்தும் செய்யாதீங்க:
எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து குடிப்பது கலோரி அளவை அதிகரிப்பதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.
உடலில் வைட்டமின் சி அளவை சரியாக வைத்திருந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி என்றால் எலுமிச்சை சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த எலுமிச்சை சாற்றில் சர்க்கரை கலந்து குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கும் பாதகமாக அமைகிறது.
இதுகுறித்து மருத்துவர் செளரப் செந்தி கூறுகையில், “சர்க்கரை கலந்த எலுமிச்சை சாற்றை பருகுவது கலோரி அளவை அதிகரிப்பதோடு, அதனால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளையும் தடுக்கிறது” என்கிறார்.
சர்க்கரைக்கு பதிலாக தேன், ஸ்டீவியா ஆகியவற்றை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளார்.
3. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid Reflux):
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை பருகுவது ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனப்படும் நெஞ்செரிச்சல் ஏற்படக் காரணமாக அமைகிறது.
வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த நீரை பருகும் போது அதில் உள்ள அமிலத்தன்மை உணவுக்குழல், குடல் உள்ளிட்டவற்றை பாதிக்கும். இந்த ஆசிட் ரிஃப்ளக்ஸனை தவிர்க்க தேனுடன் சேர்த்து எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Nandu Soup Recipe: சளி இருமல் தொல்லை இனி இல்லை.. அதான் நண்டு சூப் இருக்கே..
Image Source: Freepik