Fri Sep 11, 2026 | 10:45 PM IST

Doctor Verified

இயற்கையாக சருமத்தைப் பொலிவாக்கும் சித்த மருத்துவ வழிமுறைகள்.. மருத்துவர் நித்யா சொல்வது என்ன.?

சித்த மருத்துவத்தில் சருமப் பராமரிப்புக்கு என்னென்ன எளிய முறைகள் உள்ளன? கஸ்தூரி மஞ்சள் பேக், மேக்கப் நீக்கும் இயற்கை முறை, ஆவி பிடித்தல் போன்ற தினசரி ஸ்கின் கேர் வழிமுறைகளை மருத்துவர் நித்யா விளக்குகிறார்.

அன்றாட வாழ்க்கையில் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ரசாயனங்கள் நிறைந்த அழகு பொருட்களை விட, பாதுகாப்பான மற்றும் இயற்கையான முறைகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தினசரி சருமப் பராமரிப்புக்கான முக்கிய வழிமுறைகளை மருத்துவர் நித்யா தனது வீடியோவில் பகிர்ந்து உள்ளார்.

கஸ்தூரி மஞ்சள் + மஞ்சிட்டி – இயற்கை பிரகாசத்துக்கான சிறந்த கூட்டணி

சருமப் பராமரிப்பில் மஞ்சளின் முக்கியத்துவம் அனைவரும் அறிவது தான். அதிலும் கஸ்தூரி மஞ்சள் மற்றும் மஞ்சிட்டி பொடி சேர்த்து பயன்படுத்துவது சருமத்திற்கு மிகுந்த நன்மை தரும்.

எப்படி பயன்படுத்துவது?

  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
  • மஞ்சிட்டி பொடி – 1 ஸ்பூன்
  • தேன் – 2 துளி
  • ரோஸ் வாட்டர் – தேவையான அளவு

இவற்றை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி 10–15 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ வேண்டும்.

இதன் நன்மைகள்:

  • சருமத்தை பிரகாசமாக மாற்றும்
  • சுருக்கங்கள் வராமல் தடுக்கும்
  • கரும்புள்ளிகள் குறையும்
  • தினமும் பயன்படுத்தினால் தோல் இயற்கையாக பளபளக்கும்

இந்த பதிவும் உதவலாம்: சும்மா தகதகன்னு முகம் பளபளக்க வேண்டுமா.? இந்த ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.! மருத்துவர் பரிந்துரை..

மேக்கப் நீக்கும் இயற்கை முறை – மருத்துவரின் ஆலோசனை

மேக்கப் போட்டபடி உறங்குவது சருமத்திற்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கும். இதைத் தவிர்க்க, இரசாயனங்கள் இல்லாத இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்த மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.

  • ஆலிவ் ஆயில்
  • தேங்காய் எண்ணெய்

முகத்தை முதலில் தண்ணீரால் கழுவி, பிறகு எண்ணெய்யை தடவி மென்மையான வட்டவடிவ மசாஜ் கொடுத்து மேக்கப்பை நீக்க வேண்டும். இது:

  • துளையை அடைக்கும் ரசாயனங்களை அகற்றும்
  • சருமத்தை மென்மையாக்கும்
  • பரு, கரும்புள்ளிகள், தொற்று போன்றவற்றைத் தடுக்கும்

ஆவி பிடித்தல் – வாரத்தில் 3 முறை போதுமானது

ஆவி பிடித்தல் என்பது தோலுக்கு சிறந்த சுத்திகரிப்பு முறையாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.

இதன் பயன்கள்:

  • துளைகள் திறக்கப்படும்
  • முகத்தில் தேங்கி இருக்கும் தூசி, எண்ணெய், அழுக்கு நீங்கும்
  • முகம் பிரகாசமாகும்
  • பரு மற்றும் கருமை குறையும்

இதை வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை பின்பற்ற வேண்டும்.

இறுதியாக..

சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் இத்தகைய எளிய இயற்கை வழிமுறைகள் சருமத்தை ரசாயனங்களால் பாதிக்காமல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. கஸ்தூரி மஞ்சள் பேக், இயற்கை மேக்கப் ரிமூவர், ஆவி பிடித்தல் போன்ற நடைமுறைகளை தினசரியாக பின்பற்றி வந்தால், எந்தவித பக்கவிளைவுமின்றி நீண்டகால சரும ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சரும சம்பந்தமான விசேஷ பிரச்சனைகள், அலர்ஜி, அல்லது சென்சிடிவிட்டி உள்ளவர்கள், எந்தப் புதிய முறையையும் பின்பற்றுவதற்கு முன் மருத்துவர் அல்லது டெர்மடாலஜிஸ்ட்டின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

முடி உதிர்வை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலிகை எண்ணெய்.! மருத்துவர் நித்யா வழங்கும் முழு செய்முறை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 04, 2025 15:35 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content