Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Doctor Verified

ஆண்மை குறைவுக்கு அட்டகாசமான தீர்வு.. இந்த பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டால் போதும்.!

ஆண்மைக் குறைபாடு, விறைப்புத் தன்மை பிரச்சனை, விந்தணு உற்பத்தி குறைவு போன்றவற்றுக்கு சித்த மருத்துவத்தில் கூறப்படும் வெங்காய விதை பொடி, சிலாசித்து பர்ப்பம், தேற்றான் கற்பம், அஸ்வகந்தா உள்ளிட்ட இயற்கை முறைகள் எப்படி உதவுகிறது என்பதை மருத்துவர் நித்யா விளக்கம்.

ஆண்களில் ஆண்மைக் குறைபாடு, விறைப்புத் தன்மை குறைவு, விந்தணு உற்பத்தி குறைவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவத்தில் கிடைக்கும் சில இயற்கை மூலிகைகள் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மருத்துவர் நித்யா, மிஸ்டர் லேடீஸ் யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கக் குறைவு, சர்க்கரை நோய், மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை ஆண்மைக் குறைவிற்கு முக்கிய காரணிகளாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் எந்த பக்கவிளைவுகளுமின்றி பலத்தை அதிகரிக்கும் சில சித்த மருத்துவக் குறிப்புகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

how to improve fertility

வெங்காய விதை பொடி – ஆண்மை மேம்பாட்டுக்கான முதல் பரிந்துரை

வெங்காய விதைகள் ஆண்களின் விறைப்புத் தன்மை மற்றும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். விதைகளை லேசாக வறுத்து பொடி செய்ய வேண்டும். தினமும் நெய்யுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் ஆண்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். இது உடலின் சூடு சீராக அமைந்து, உயிர்சக்தியை அதிகரிக்க உதவும் என்று அவர் விளக்குகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: ஆண்மைக்குத் தேவையான சக்தி! விந்தணு எண்ணிக்கையை வேகமாக உயர்த்தும் உணவுகள் – சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரை

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பான ‘சிலாசித்து பர்ப்பம்’

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பல ஆண்களுக்கு காலப்போக்கில் ஆண்மைக் குறைபாடு ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாகச் செயல்படும் மருந்து சிலாசித்து பர்ப்பம் என நித்யா கூறுகிறார். ஒரு சிட்டிகை அளவு பர்ப்பத்தை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வது, நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்தை பலப்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். சித்த மருத்துவத்தில் இது ஆண்களின் உயிர்சக்தியை பெரிதும் உயர்த்தும் மருந்தாகப் பார்க்கப்படுகிறது.

தேற்றான் கற்பம் + அஸ்வகந்தா – இரண்டும் சேரும் போது ‘டபுள் ஆக்‌ஷன்’

இந்த இரண்டு மூலிகைகளும் ஆண்களின் ஆண்மையை வலுப்படுத்தும் சக்திவாய்ந்த கலவைகள் என்று அவர் வலியுறுத்துகிறார். தேற்றான் கோட்டை கற்பம் உடல் பலத்தை அதிகரிக்கும். அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைத்து, உடல் சோர்வை நீக்கும். இரண்டையும் நெய்யுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், ஆண்மைக் குறைபாடு குறையும், உயிர்சக்தி உயர்வு, உடல் வலிமை மேம்பாடு, விறைப்புத் தன்மை பிரச்சனைகளை சரிசெய்வது - இந்த கலவை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் முழுமையாக மேம்படும் என நித்யா குறிப்பிட்டுள்ளார்.

how to improve fertility in tamil

இறுதியாக..

ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவம் வழங்கும் இயற்கை மூலிகைகள் ஆண்களின் உடல்நலத்தை மேம்படுத்த ஒரு பாதுகாப்பான வழியாகும். நெய்யுடன் கலந்து வெங்காய விதை பொடி, சிலாசித்து பர்ப்பம், தேற்றான் கற்பம், அஸ்வகந்தா போன்றவற்றை பயன்படுத்துவது ஆண்களுக்கு படிப்படியாக பலன்களை அளிக்கும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். ஆனால், நீண்டநாள் நோய்கள் அல்லது ஹார்மோன் பிரச்சனைகள் இருப்பின் நிபுணரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சித்த மருந்துகளைப் பயன்படுத்தும் முன், தங்களது உடல்நிலை, வயது, மருந்து வரலாறு போன்றவற்றை கருத்தில் கொண்டு குடும்ப மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

Read Next

மார்பக முடியை அகற்றுவது குறித்து ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டிய டிப்ஸ் இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 01, 2025 13:47 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content