மார்பக முடியை அகற்றுவது குறித்து ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டிய டிப்ஸ் இங்கே!

ஆண்கள் Chest hair removal நன்மை-குறைபாடுகள், Step by Step shaving guide, தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் அனைத்தையும் விரிவாக காணலாம். Chest hair remove பண்ணலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ள ஆண்களுக்கு இந்த தகவல்கள் வழிகாட்டியாக இருக்கும்.
  • SHARE
  • FOLLOW
மார்பக முடியை அகற்றுவது குறித்து ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டிய டிப்ஸ் இங்கே!

தனிப்பட்ட அலங்காரத்தில் பெண்களுக்கு சமமாக ஆண்களும் அதிக கவனம் செலுத்தும் காலம் இது. குறிப்பாக Chest hair குறித்து “Shave செய்யலாமா, வெட்டலாமா, இல்லை இயல்பாக விடலாமா?” என்ற கேள்வி அதிகமாக எழுகிறது. தோல் நிபுணர்கள் கூறுவதாவது: “Shvaing தவறில்லை; ஆனால் தோல் வகை, வாழ்க்கை முறை, தொழில் தேவைகள் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். சரியான கருவி, சரியான முறையில்தான் பாதுகாப்பு.”


முக்கியமான குறிப்புகள்:-


எப்போது மார்பக முடியை அகற்ற வேண்டும்?

* அத்லெட்கள்: நீந்தல், பாடி-பில்டிங், சைக்கிளிங் போன்றவற்றில் வியர்வை அரிப்பு குறைய உதவும்.

* மருத்துவ தேவைகள்: ECG pad, பிளாஸ்டர் ஒட்டுதல் போன்ற சமயங்களில் முடி குறைந்தால் எளிது.

* அழகியல் விருப்பம்: சிலர் சுத்தமான தோற்றத்தைக் விரும்புகிறார்கள்.

* அதிக வெப்பத்தில்: வியர்வை அரிப்பு குறைக்க உதவும்.

artical  - 2025-08-20T001112.494

எப்போது தவிர்க்க வேண்டும்?

* செயலில் இருக்கும் பிம்பிள்/புண்கள், ஈக்செமா, ப்சோரியாசிஸ், எரிச்சல்.

* மச்சங்கள் அதிகமுள்ள பகுதியை நேரடியாக Shave செய்யக்கூடாது.

* Sunburn இருந்தால் தவிர்க்கவும்.

மார்பு முடி பராமரிப்பு: நன்மைகளும் குறைபாடுகளும்..

சாத்தியமான நன்மைகள்

* வியர்வை மற்றும் வாசனையை மேலாண்மை செய்ய உதவும்.

* க்ரீம்/லோஷன்/சன்ஸ்கிரீன் போன்றவை அமைகச் செய்யும்.

* டாட்டூ அல்லது தசை வரைகள் வரைவாக தெரியும்.

அபாயங்கள்

* எரிச்சல், ரேசர் பம்ப்ஸ், Ingrown hair அபாயம்.

* 1–3 நாட்களில் முள் குத்துவது போல மீளும் உணர்வு.

* அடிக்கடி பராமரிப்பு தேவையாவது நேரசெலவு.

இந்த பதிவும் உதவலா: After Shaving Tips: கோடையில் தாடி ஷேவ் செய்தபின் எரிச்சல் வராமல் இருக்க இதை செய்யவும்!

கருவிகள் – “கிட்ட தயார்” பட்டியல்

* Body Trimmer (கார்டு அளவு: 3–5 mm தொடங்கவும்)

* கார்ட்ரிட்ஜ் ரேசர்/சேஃப்டி ரேசர் (கூர்மை, சுத்தம்)

* Body shave gel/cream (ஆல்கஹால்-இல்லாத, வாசனை குறைவு)

* மென்மையான ஸ்க்ரப்/லூஃபா, குளிர்ந்த & சூடான தண்ணீர்

* அலோவேரா மோய்ஸ்சரைசர்

* சுத்தத் துணி, பெரிய கண்ணாடி, நல்ல ஒளி

artical  - 2025-08-20T001035.238

Chest Shaving Step-by-Step Guide

Step 1: டிரிம்மிங்

முழுமையாக Shaving செய்யும் முன் 3–5 mm வரை டிரிம் செய்யுங்கள். இது ரேசர் இழுப்பை குறைத்து எரிச்சலைத் தடுக்கும்.

Step 2: வெந்நீர் குளியல் + மென்மையான எக்ஸ்ஃபோலியேஷன்

5–10 நிமிட வெந்நீர் குளியல் முடியை மென்மையாக்கும். மெதுவாக ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்குங்கள்.

Step 3: திசை வரைபடம்

முடி வளர்ந்திருக்கும் திசையை கண்ணாடியில் பார்த்து மனதில் பதியுங்கள். எதிர் பாதையில் Shave செய்யவும்.

Step 4: ஷேவிங் ஜெல்/கிரீம்

செறிவாக, மெல்லிய படலமாகப் பூசுங்கள். சோப்பு மட்டும் போதாது—உலர்ச்சி/எரிச்சல் தரலாம்.

Step 5: குறுகிய ஸ்ட்ரோக்

ரேசரை முடி வளர்ச்சி திசையில் குறுகிய ஸ்ட்ரோக்காக இயக்குங்கள். அடிக்கடி கத்தியை கழுவி கூந்தல் படிந்ததை நீக்குங்கள். 

Step 6: சென்சிட்டிவ் பகுதிகள் பாதுகாப்பு

இரண்டு விரலால் நிப்பிள் பகுதியை மறைத்து, அதை சுற்றி Shave செய்யவும்.

கழுத்தெலும்பு அருகில் சிறு ஸ்ட்ரோக்குகள்; மச்சங்கள் மேலே ரேசர் ஓட்ட வேண்டாம்.

Step 7: குளிர்ந்த நீர் ரின்ஸ்

திறந்த நிலையில் இருக்கும் துவாரங்கள் சுருங்க, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வெளியேறிய இடங்களை ஒளி மாற்றிப் சரிபார்க்கவும்.

Step 8: After-Shave பராமரிப்பு

துடைத்துக்கொண்டு அலோவேரா ஜெல் தடவவுன். பின்னர் லேசான மோய்ஸ்சரைசர் யூஸ் செய்யவும்.

artical  - 2025-08-20T000926.711

Step 9: Ingrown Hair தடுப்பு

* 12–24 மணி நேரம் திட உடைகள், உடற்பயிற்சி தவிர்க்கவும்.

* ஆல்கஹால் அதிகமான லோஷன் தவிர்க்கவும்.

* வாரத்தில் 2–3 முறை 0.5–2% சாலிசிலிக்/லாக்டிக் அமில லோஷன் (மென்மையான கேமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்) பயன்படுத்தலாம்.

* புதிய, சுத்தமான பிளேடு—எப்போதும்.

Step 10: பராமரிப்பு அட்டவணை

டிரிம்: 7–10 நாட்களுக்கு ஒருமுறை.

Shaving: 3–5 நாட்களுக்கு ஒருமுறை (உங்கள் மீள்வேகத்தைப் பொறுத்து).

Shaving செய்த 48 மணி நேரத்திற்குப் பிறகு மெதுவான எக்ஸ்ஃபோலியேஷன் செய்யவும்.

முடிவு

ஆண்கள் மார்பு முடியை Shaving செய்யலாமா? பதில்: உங்கள் தோல்–வாழ்க்கை முறை–விருப்பம் என்பவைகளைப் பொறுத்தது. சரியான கருவி, சரியான படிகள், சரியான அடுத்தகட்ட பராமரிப்பு இருந்தால், பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இதைச் செய்யலாம். சந்தேகம் இருந்தால் டெர்மடாலஜிஸ்ட் ஆலோசனை பெறுவது புத்திசாலித்தனம்.

Read Next

இயற்கையான வயாகரா வேண்டுமா.? இந்த ஜூஸ் போதும்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 30, 2025 22:42 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்