Bone Health: நமது உடலில் எலும்புகளை வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையேல் தடுக்கி விழுந்தால் கூட எலும்புகள் உடைந்து விடும். எலும்புகள் பலவீனமடைவதை ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது எலும்புகள் மெலிதல் என்று அழைக்கப்படுகிறது. எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. உடலில் கால்சியம் அல்லது வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் அதிகம். சமீபத்தில், 30 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
1.ஊட்டச்சத்து மிக்க உணவு:
வலுவான எலும்புகளுக்கு சத்தான உணவு அவசியம். எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கால்சியம் மற்றும் வைட்டமின் டி அவசியம். eலும்புகளை வலுவாக வைத்திருக்க பால் பொருட்கள், கடல் உணவுகள் மற்றும் கீரைகளைஉட்கொள்ள வேண்டும், ஏனெனில் இவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
அதேபோல் காலை மற்றும் மாலை வெயிலில் சிறிது நேரம் செலவிடுவது விலைமதிப்பற்ற வைட்டமின் டி சத்து கிடைக்க உதவும்.
2.எடை மேலாண்மை:
வலுவான எலும்புகளுக்கு ஆரோக்கியமான உடல் எடை அவசியம். அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எடை குறைவாக இருப்பது எலும்பின் அடர்த்தியை குறைக்கிறது, அதிக எடை எலும்பின் தரத்தை பலவீனப்படுத்துகிறது. அடிக்கடி உடல் எடையை குறைப்பது அல்லது அதிகரிப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
3.உடற்பயிற்சி அவசியம்:
வலிமையான எலும்புகளைப் பெற வேண்டுமானால், உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் முதல் அறிவுரையாகும். குறிப்பாக வெயிட் லிப்டிங் பயிற்சிகள் எலும்புககளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: Anti-Aging Foods: என்றென்றும் இளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்!
தினமும் உடற்பயிற்சி செய்வது எலும்பின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, வலுவான தசைகளையும் உருவாக்கிறது. எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து, வலிமையாக்க வாக்கிங், ஜாக்கிங், வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
4.புகை, மது கூடாது:
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பழக்கங்கள் எலும்புகளை உருவாக்க உதவும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனைக் குறைக்கின்றன.
புகைபிடித்தல் உடலை பலவீனப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5.ரெகுலர் உடற்பரிசோதனை:
- எலும்பு அடர்த்தி ஸ்கேன் (Bone density scan) - எலும்புகளின் ஆரோக்கியத்தை சரிபார்க்க எலும்பு அடர்த்தி ஸ்கேனை அடிக்கடி செய்ய வேண்டும். குறிப்பாக 58 வயதை அடைந்த பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறையாவது இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையானது, உடலின் கொழுப்பு சதவீதம் அல்லது உங்கள் எலும்பின் தாது அடர்த்தியை அளவிடுவதன் மூலம், எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுக்கு உங்கள் எலும்புகள் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய உதவுகிறது.

- ஆர்த்தோ பெட்டிக் ஹெல்த் ஸ்கிரீனிங் (Orthopedic Health Screening) - மூட்டு பிரச்சனைகள், கீல்வாதம் அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குடும்ப வரலாற்று நோய்களைக் கொண்ட பெண்களுக்கு எலும்பியல் சுகாதார பரிசோதனை (Orthopedic Health Screening) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஸ்கிரீனிங் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏதேனும் அசாதாரணங்கள் அல்லது தேய்மானங்கள் அல்லது சேதங்கள் உள்ளதா? என்பதை சரிபார்க்க உதவுகிறது.
- டிஸ்கோகிராபி, எலும்பு சிண்டிகிராபி, மைலோகிராபி மற்றும் எலக்ட்ரோமோகிராபி ஆகியவை சில பொதுவான எலும்பியல் சோதனைகளாகும்.
Image Source: Freepik