Anti-aging foods: ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொல்வது போல், “வயசானாலும் ஸ்டைலும், அழகும் உன்ன விட்டு போகல” என நம்மைப் பார்த்து யாராவது சொன்னால் எவ்வளவு ஹேப்பியாக இருக்கும். ஆனால் பணிச்சூழல், அதிகப்படியான வேலை, உடற்பயிற்சி இன்மை, மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் இப்போதெல்லாம் 40 வயதிலேயே நிறைய பேருக்கு வயதான தோற்றம் வந்துவிடுகிறது.
“லைப் பிகின்ஸ் அட் 40” என்பார்கள் எனவே வயது கூடினாலும், எப்போதும் எங் லுக்கில் இருக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஆன்டி ஏஜிங் கீரிம், ஃபேஸ் மாஸ்க், சீரம், பேசியல் என காஸ்மெட்டிக்கிற்கு காசை வாரி இறைப்பதை விட, ஆன்டிஆக்ஸிடன்ட், நல்ல கொழுப்பு, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், அதிக தண்ணீர் குடிப்பதுமே சரும பராமரிப்பிற்கு சிறந்ததாகும்.

இதையும் படிங்க: Childhood Obesity: குழந்தையின் உடல் பருமனை சரி செய்வது எப்படி?
ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது எப்படி சருமத்தை பொலிவுடனும், கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இல்லாமல் பராமரிக்கவும் உதவுகிறது என பகிர்ந்துள்ளார்.
1.முட்டைக்கோஸ் (Cabbage):
முட்டைகோஸில் உள்ள இந்தோல்-3-கார்பினோல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஏஜிங் சத்துக்கள் சருமம் வயதான தோற்றத்தை அடைவதை குறைக்கிறது.
முட்டைக்கோஸில் உள்ள ஏ மற்றும் டி வைட்டமின்கள் சரும செல்கள் சேதமடைவதைத் தடுப்பதோடு, தீங்கிழைக்கூடிய சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
2.கேரட் (Carrots):
வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேரட், சருமம் விரைவில் வயதான தோற்றம் அடைவதை தடுக்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள எண்ணெய்யை அகற்றி கூடுதல் பொலிவை தருகிறது.
மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற ஆரம்ப வயதான அறிகுறிகளை எதிர்கொள்ள கற்றாழை சாறுடன் கூடிய கேரட் கலவையை முகத்தில் மாஸ்காக அணியலாம். இது கொலாஜனை தூண்டி, சரும சுருக்கங்களை குறைக்கிறது.
3.திராட்சை (Grapes):
திராட்சையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் உள்ள செல்களில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது. திராட்சையின் தோலில் இருந்து பெறப்படும் ரெஸ்வெராட்ரோல், இயற்கையான சன்ஸ்கீரினாக செயல்பட்டு சருமத்தை சூரியனின் சுட்டெரிக்கும் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: Green tea vs Coffee: காபியை விட கிரீன் டீ நல்லதா? – உண்மை இதோ!
4.வெங்காயம் (Onions):
வெங்காயத்தில் நிறைந்துள்ள குயர்செட்டின் ரத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகவும் உள்ளது. பூண்டைப் போலவே வெங்காயத்திலும் முதுமையைத் தடுக்கும் சக்தி அதிகமுள்ளது.
தக்காளி (Tomato):
தக்காளியில் வைட்டமின் ஏ, சி , பீட்டா கரோட்டின், சல்பர், குளோரின், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
குறிப்பாக தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்றவற்றில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமின்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
6.பாலக் கீரை (Spinach):
பாலக் கீரையில் உள்ள லுடீன் சக்தி வாய்ந்த வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பாலக் கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை அடைவதை தடுக்கிறது.