Is Red Wine Good for Health: சிவப்பு ஒயினில் இயற்கை சேர்மங்களில் ஒன்றான ரெஸ்வெராட்ரோல் காணப்படுவதால் இது ரத்த நாளங்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என கருதப்படுகிறது. இதய ஆரோக்கியம், உடல் எடை மேம்பாடு போன்றவை குறித்து அவ்வப்போது வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் ஒரு உணவுப்பொருளோ அல்லது ஒரு செயலின் மீதான கருத்தையே மாற்றிவிடுகின்றன. அதுபோலவே ரெட் ஒயின் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்ற கருத்தை உடைக்கும் வகையில் வெளியான ஆய்வு முடிவுகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை மருத்துவர் செளரப் செந்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் செளரப் செந்தி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், “ரெட் ஒயின் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்ற கருத்தை பல்வேறு ஆய்வுகள் பொய்யாக்கியுள்ளன. சிறிய அளவிலான ஒயினை குடித்தாலும் ஃபேட்டி லிவர் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகள் உருவாகக்கூடும். எனவே ரெஸ்வெராட்ரோலின் நன்மைகளை பெற விரும்புவோருக்கு ரெட் ஒயினுக்கு பதிலாக, சிவப்பு திராட்சை, பெர்ரி, வேர்கடலை போன்றவை உட்கொள்ள பரிந்துரைக்கிறேன்” என்கிறார்.

ஒருவர் எவ்வளவு ஒயின் குடிக்கலாம்?
ஒயினாகவே இருந்தாலும் அதனை மிதமான அளவு குடிப்பதே சிறப்பானது. மருத்துவர்களின் பரிந்துரையின் படி பெண்கள் ஒரு குவளையும், ஆண்கள் இரண்டு குவளை அளவிற்கும் ஒயின் குடிக்கலாம். ஆனால் ஒரு கண்ணாடி குவளையில் 5 அவுன்ஸுக்கு மேல் ஒயின் பரிமாறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: Green tea vs Coffee: காபியை விட கிரீன் டீ நல்லதா? – உண்மை இதோ!
ஒயின் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
மிதமான அளவில் குடித்தாலும் ஒயினின் ஒவ்வொரு கிராமும் 7 கலோரிகளைக் கொண்டுள்ளதால் இது உங்களுடைய வெயிட் லாஸ் அல்லது வெயிட் மேனேஜ்மெண்ட் விவகாரங்களில் பின்னடைவை ஏற்படுத்தும் என மருத்துவர் எச்சரிக்கிறார்.
அதுமட்டுமின்றி கீழே குறிப்பிட்டுள்ள சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்,
- தூக்கமின்மை
- வலி நிவாரணிகள் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்துவதில் சிக்கல்
- மனநல பிரச்சனைகள்
- ஒற்றைத் தலைவரி
- ஃபேட்டி லீவர் (Fatty Liver)

மது அருந்துவது இதயத்திற்கு நல்லதா?
சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகளின் தோலில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற இயற்கை சேர்மங்கள் இதயம் மற்றும் ரத்த நாளங்களை பாதுகாக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இதற்கான ஆய்வு முடிவுகள் உறுதியாக இல்லை.
சிவப்பு ஒயின் அருந்துவது இதய நோயை தவிர்க்க உதவும் என்பதற்கான சான்றுகள் மிகவும் பலவீனமாக உள்ளதாக ஹார்வர்ட்டைச் சேர்ந்த இன்டர்னிஸ்ட் மருத்துவர் கென்னத் முகமல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Anti-Aging Foods: என்றென்றும் இளமையாக ஜொலிக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்!
மேலும் பிரான்ஸில் ரெட் ஒயின் குடிப்பதால் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுவதையும் டாக்டர் கென்னத் மறுத்துள்ளார். ஏனெனில் ஜப்பானில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பிரான்ஸை விட குறைவு. ஆனால் அங்கு ரெட் ஒயினை விட பீர் உள்ளிட்ட பிற ஆல்கஹால் வகைகளை குடிப்பவர்களே அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.