Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Doctor Verified

முட்டையில் நச்சு உள்ளதா.? நாமக்கலில் 55 கோழிப் பண்ணைகளில் திடீர் ஆய்வு..

முட்டைகளில் தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உணவு பாதுகாப்புத் துறை திடீர் ஆய்வு மேற்கொண்டது. சேகரிக்கப்பட்ட முட்டை மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

முட்டை உற்பத்திக்காக தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தின் பேரில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முட்டை உற்பத்தியில் நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முட்டையில் நச்சுப் பொருள் இல்லை – ஒருங்கிணைப்பு குழு விளக்கம்

இந்த விவகாரம் குறித்து, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று விளக்கமளிக்கையில், “முட்டைகளில் எந்தவித நச்சுப் பொருளும் இல்லை” என தெரிவித்திருந்தது. ஆனால், சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்யவும் ஆய்வு அவசியம் என உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்தது.

ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிப்பு

இதனிடையே, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், “தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, கோழிப் பண்ணைகளில் ஆய்வு நடத்தி, முட்டை மாதிரிகள் சேகரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் தினமும் முட்டை சாப்பிடலாமா.? நிபுணர்கள் கூறும் சரியான அளவு மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..

11 குழுக்கள் – 55 பண்ணைகள் ஆய்வு

அதன்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 11 குழுக்களாக பிரிந்து, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 55 கோழிப் பண்ணைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒவ்வொரு பண்ணையிலிருந்தும், 10 முட்டைகள் வீதம் மொத்தம் 55 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ள மாதிரிகள்

சேகரிக்கப்பட்ட முட்டை மாதிரிகள் அனைத்தும், சென்னையில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கு நாளை அனுப்பப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் தான், தடைசெய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? முட்டைகளில் நச்சு பொருள் கலந்துள்ளதா? என்பது உறுதியாக தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

இறுதியாக..

முட்டை உற்பத்தியில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் ஆய்வு, பொதுமக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆய்வக அறிக்கை வெளியாகும் வரை, அதிகாரப்பூர்வ முடிவுகளை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Disclaimer: இந்த செய்தி அரசு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் மற்றும் ஆய்வு விவரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, எந்த முடிவையும் முன்கூட்டியே எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Read Next

இந்த நான்கையும் முற்றிலுமாகத் தவிர்ப்பதால் மறைமுகமாக ஏற்படும் விளைவுகள்.. நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 18, 2025 22:14 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content