Fri Sep 11, 2026 | 11:16 PM IST

Doctor Verified

குளிர்காலத்தில் படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடியுங்கள்.! உடனே கிடைக்கும் 5 அதிசய நன்மைகள் இங்கே..

குளிர்காலத்தில் படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, சிறந்த தூக்கம், மூட்டு வலி நிவாரணம், பிரகாசமான சருமம், செரிமானம் மேம்பாடு போன்ற 5 முக்கிய நன்மைகள் கிடைக்கும். மருத்துவ நிபுணர் விளக்கம்.

குளிர்காலம் வரும்போது சளி, இருமல், உடல் வலி, தூக்கம் குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். இந்நிலையில், உடலை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில பாரம்பரிய உணவுகள் மருத்துவ ரீதியாகவும் பெரும் பயன் தருகின்றன. அவற்றில் ஒன்றாக ‘தங்கப் பால்’ எனப்படும் மஞ்சள் பால் கருதப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உணவியல் நிபுணர் ரக்ஷிதா மேஹ்ரா, குளிர்கால இரவுகளில் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை விளக்குகிறார்.

படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடிப்பதன் நன்மைகள்

1. நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்

குளிர்காலத்தில் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் வேகமாக பரவுகின்றன. மஞ்சளில் உள்ள குர்குமின், ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடல் பாதுகாப்பை அதிகரிக்கின்றன. சூடான மஞ்சள் பால் குடிப்பதால் - உடல் வெப்பம் உயர்வு, தொற்று அபாயம் குறைவு, அடிக்கடி ஏற்படும் சளி-இருமல் தடுப்பு என பல நன்மைகள் கிடைக்கின்றன.

2. ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்திற்கான உதவி

குளிர்காலத்தில் நாள் குறைவதால் தூக்க சுழற்சி சீர்குலையலாம். பாலில் உள்ள டிரிப்டோபான் - செரோடோனின், மெலடோனின் என்ற தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இரவு தூங்குவதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பது - மன அமைதி, மன அழுத்தம் குறைவு, ஆழ்ந்த, தடையற்ற தூக்கம் பெற உதவும்.

3. மூட்டு மற்றும் தசை வலி குறையும்

குளிர்காலத்தின் பொதுவான பிரச்சினை - மூட்டு மற்றும் தசை வலி. மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) சக்தி - வீக்கம், விறைப்பு, உடல் வலி - எல்லாவற்றையும் குறைக்கிறது. சூடான பால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் தளர்ச்சியையும் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: செரிமானத்தை மேம்படுத்துவது முதல் இதய ஆரோக்கியம் வரை.. மஞ்சள் பால் செய்யும் அற்புதங்கள் இங்கே..

4. சருமம் பிரகாசமாகும்

குளிர்காலத்தில் சருமம் வறண்டு, மந்தமாகிவிடும். மஞ்சளின் கிருமி நாசினி மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு தன்மைகள், இரத்தத்தை சுத்தப்படுத்தி, உள்ளிருந்து சருமத்தை ஊட்டம் அளித்து, இயற்கையான பளபளப்பை தருகின்றன. மஞ்சள் பால் உடல் ஈரப்பதத்தை பராமரிப்பதால், சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

5. செரிமானம் மேம்பட்டு வயிறு சுத்தமாகும்

குளிர்காலத்தில் தண்ணீர் உட்கொள்ளுதல் குறையும்; எண்ணெய் உணவு அதிகரிக்கும். இதனால் அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். மஞ்சளில் உள்ள குர்குமின், பித்த சுரப்பை தூண்டி, உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. இரவில் மஞ்சள் பால் குடிப்பது, வயிற்றை சுத்தமாக வைத்திருக்கிறது, செரிமான கோளாறுகளை குறைக்கிறது.

இறுதியாக..

குளிர்கால இரவுகளில் ஒரு கப் சூடான மஞ்சள் பால் குடிப்பது உடல் முழுவதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த வீட்டு வைத்தியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி, தூக்கம், சருமம், செரிமானம், மூட்டு வலி—எல்லாவற்றிற்கும் இது இயற்கையான மருந்தாக செயல்படுகிறது.

Disclaimer: இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ நிபுணரின் கருத்துகளையும் பொதுவான ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டவை. தீவிர உடல்நலக் குறைபாடுகள் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

காலை உணவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது? எப்படி சாப்பிடணும், எந்த உணவை சாப்பிடணும்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 12, 2025 21:17 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content