Sat Sep 12, 2026 | 12:04 AM IST

Doctor Verified

மந்தமான கூந்தலுக்கு நாவல் பழம் ஹேர் மாஸ்க்.. 4 வாரங்களில் பளபளக்கும் முடி.!

நாவல் பழம் பொடி, வெந்தயம், தயிர் கொண்டு தயாரிக்கும் ஹேர் மாஸ்க் உங்கள் கூந்தலுக்கு பளபளப்பையும் ஆரோக்கியத்தையும் தரும். 4 வாரங்களில் முடி உதிர்தல், பொடுகு, உச்சந்தலை வறட்சி பிரச்சினைகளை குறைக்க உதவும் இயற்கை நிவாரணம்.

முடி பளபளப்பு குறைவு, உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, வறட்சி போன்ற பிரச்சினைகள் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளன. சூடான வானிலை, மழைக்கால ஈரப்பதம், மனஅழுத்தம் மற்றும் தவறான பராமரிப்பு ஆகியவை முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இந்நிலையில், இயற்கை மருத்துவம் ஆர்க்ஸ்பெர்ட்டான டாக்டர் நீலிமா ராய் பரிந்துரைத்துள்ள பாரம்பரிய நாவல் பழம் ஹேர் மாஸ்க் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாவல் பழம் ஹேர் மாஸ்க்கின் சிறப்பு

நாவல் பழம் பொடி, வெந்தயம், தயிர் ஆகிய மூன்று இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை புத்துயிர் பெறச் செய்யும்.

நாவல் பழம் பொடி – ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. இது உச்சந்தலையில் உள்ள தொற்றுகளை குறைத்து, பொடுகு மற்றும் வறட்சியை தடுக்கும். மேலும், வெள்ளை முடியை கருமையாக்கவும் பளபளப்பை கூட்டவும் உதவுகிறது.

வெந்தயம் – புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த வெந்தயம் முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இது உதிர்தலைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தயிர் – கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த தயிர் உச்சந்தலையை ஈரப்பதமாக்கி, வறட்சியையும் அரிப்பையும் குறைக்கிறது. மேலும், வைட்டமின் சி உள்ளதால் பொடுகை அகற்றவும் உதவுகிறது.

ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை

* 2 டேபிள் ஸ்பூன் நாவல் பழம் பொடி எடுக்கவும்.

* 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்க்கவும்.

* 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக்கவும்.

* இந்த பேஸ்ட்டை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும்.

* 30–45 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி, வழக்கம்போல் ஷாம்பு போடவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஹேர் சீரம் தடவுவது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? நிபுணர்கள் கூறும் உண்மை..

பயன்பாடு & முடிவுகள்

வாரத்திற்கு இரண்டு முறை தடவி 4 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்தல் குறையும். உச்சந்தலையின் அரிப்பு, வறட்சி, தொற்று குறையும். முடி பளபளப்பு, நெகிழ்ச்சி அதிகரிக்கும். முன்கூட்டியே நரைப்பதும் குறைய வாய்ப்பு உள்ளது.

கவனிக்க வேண்டியவை

* பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து ஒவ்வாமை இல்லையா என உறுதி செய்யவும்.

* தயாரித்த பேஸ்ட்டை 3 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் சேமித்து பயன்படுத்தலாம்.

* கடுமையான முடி பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

இறுதியாக..

முடி ஆரோக்கியத்தை பேண, ரசாயனப் பொருட்களை விட இயற்கை தீர்வுகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான வழியாகும். நாவல் பழம் பொடி, வெந்தயம், தயிர் ஹேர் மாஸ்க் பளபளக்கும் கூந்தலுக்கு வழிவகுக்கிறது. சரியான முறையில் பயன்படுத்தினால், 4 வாரங்களில் கண்கூடாக முடி மாற்றத்தை காண முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுப் பயனுக்காக வழங்கப்பட்டுள்ளது. முடி உதிர்தல் அல்லது உச்சந்தலை பிரச்சினைகள் கடுமையாக இருந்தால், மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

Read Next

தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து முடிக்கு யூஸ் பண்ணி பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 20, 2025 21:45 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content