Sugarcane Juice: குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sugarcane Juice: குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?


What is the best time to take sugarcane juice: கரும்பு ஜூஸ் குடிக்க அனைவரும் விரும்புவார்கள். கரும்பு சாறு சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் தான் கரும்பு ஜூஸ் குடிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், குளிர் காலத்திலும் கரும்பு ஜூஸ் குடிப்பது நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சரியாக தான் படித்தீர்கள்.

குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரும்பு ஜூஸ் ஐ கோடையில் மட்டுமே குடிப்பது நல்லது என நீங்கள் நினைத்தால், அது தவறான கருத்து. குளிர்காலத்தில் கரும்புச்சாறு உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதன் நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Health Benefits of Milk: இரவில் சூடாக பால் குடிப்பது தூக்கத்திற்கு உதவுமா? உண்மை இங்கே!

குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலை நீரேற்றமாக வைக்கும்

குளிர்காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. உண்மையில், கரும்பு ஜூஸ் குளிர் காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குளிர்ந்த காலநிலையில் மக்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பார்கள். இந்நிலையில், உடலில் நீர் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

கரும்பு ஜூசில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். இது அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளது.

எலும்புகளை வலுப்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியுடன், கரும்பு ஜூஸ் எலும்புகளை வலுப்படுத்தும். எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு கரும்பு ஜூஸ் அருந்துவது நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Eggs In Breakfast: காலை உணவாக முட்டை சாப்பிடலாமா? 

மன அழுத்தம் குறையும்

கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். கரும்பு ஜூஸ் குடிப்பதால் தூக்கமும் மேம்படும்.

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும்

கரும்பு ஜூஸ் செரிமான அமைப்புக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைப்பதற்கும், வயிற்றை ஆரோக்கியமாக வைப்பதற்கும் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் செரிமான மண்டலம் சீராக இருக்கும்.

யுடிஐ தொற்றை தடுக்கும்

கரும்பு ஜூஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும் UTI தொற்றுகளைத் தடுப்பதிலும் உதவியாக இருக்கும். கரும்பு ஜூஸ் உங்கள் கல்லீரலை வலுப்படுத்த உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா? நிபுணரின் கருத்து என்ன?

மஞ்சள் காமாலை குணமாகும்

கரும்பு ஜூஸ் மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. மஞ்சள் காமாலைக்கு கரும்பு ஒரு சிறந்த மருந்து. கரும்பு ஜூஸ் அருந்தினால் மஞ்சள் காமாலை குணமாகும்.

எடை குறைப்புக்கு உதவும்

கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். கரும்புச் சாற்றில் கொழுப்புச் சத்து இல்லை. கரும்பு ஜூஸ் நார்ச்சத்து நிறைந்தது.

Pic Courtesy: Freepik

Read Next

குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா? நிபுணரின் கருத்து என்ன?

Disclaimer