Eggs In Breakfast: தினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவது நல்லதா? இதனை எடுத்துக்கொள்வதால் என்ன நடக்கும்? இது குறித்து விரிவாக காண்போம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்கிறார்கள். முட்டையை காலை உணவில் சாப்பிடுவது நல்லதா? காலையில் முட்டை சாப்பிட்டால் பிரச்னை வருமா? என்பதை இங்கே காண்போம்.

காலை உணவாக முட்டை சாப்பிடலாமா?
காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. அதனால்தான் முட்டை சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் 50 சதவீதம் புரதமும், மஞ்சள் கருவில் 90 சதவீதம் கால்சியமும் இரும்புச்சத்தும் உள்ளது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், காலை உணவாக முட்டை சாப்பிட்டால் அதிகம் பசி எடுக்காது என்கிறார்கள். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் சத்தும் அதிகம் உள்ள முட்டைகளை சாப்பிட்டாலே போதும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்
இந்த சத்துக்கள் எல்லாம் முட்டையில் இருக்கு!
தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதால் நமது உடலுக்கு எவ்வளவு சத்துக்கள் கிடைக்கிறது என்று பாருங்கள்.
ஃபோலேட் - 5 சதவீதம்
செலினியம் - 22 சதவீதம்
பாஸ்பரஸ் - 9 சதவீதம்
வைட்டமின் A - 6 சதவீதம்
வைட்டமின் B2 - 15 சதவீதம்
வைட்டமின் B5 - 7 சதவீதம்
வைட்டமின் B12 - 9 சதவீதம்
கண் பிரச்னையே வராது.!
சிறு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் கோழி முட்டை சேர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் A, லுடீன், ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. வளர்சிதை மாற்றத்தின் சரியான செயல்பாட்டிற்கு முட்டை பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி தவிர, மீதமுள்ள வைட்டமின்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கலோரிகள், அதிக புரதம் மற்றும் தாதுக்கள் கொண்ட முட்டையானது வலுவான எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்..
தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். காலை உணவையும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், காலையில் உண்ணும் உணவே அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதாகக் கூறப்படுகிறது. காலை உணவை தவிர்த்தால் அது உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையை உட்கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.
Image Source: Freepik