Health Benefits Of Eating Ragi On Morning: நாம் உண்ணும் உணவு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் தினமும் சரிவிகித உணவை உண்ணுங்கள் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
குறிப்பாக காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு ராகி சிறந்த தேர்வு என்கிறார்கள். காலை உணவாக ராகி சாப்பிட்டால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அந்த நன்மைகள் என்ன என்பதை இங்கே காண்போம்.

புரதச்சத்து கிடைக்கும்
ராகியில் புரதம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் ராகி உணவை சாப்பிட்டால் செரிமானம் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: Ragi Benefits: நீங்க எப்போதும் இளமையா இருக்கணுமா? அப்ப ராகி எடுத்துக்கோங்க.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
ராகி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் ராகியை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
வலுவான எலும்புகள்
ராகியில் கால்சியம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் காலை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.
இதயம் ஆரோக்கியம்
ராகியில் அமினோ அமிலங்கள் அதிகம். அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன. மேலும் இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கூந்தலுக்கு ஊட்டமளிக்கும்
ராகுவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கிறது.
பால் உற்பத்தி
பாலூட்டும் தாய்மார்கள் ராகுவை சாப்பிடுவதால் பால் உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மன ஆரோக்கியம்
மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இவற்றை உட்கொள்வதால் பலன் பெறலாம்.
Image Source: Freepik