Sugarcane juice: கரும்பு சாறு குடிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை ஏராளம். கரும்பு சாறு சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. உண்மையில், கோடையில் கரும்புச்சாறு குடிப்பதை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், குளிர் காலத்திலும் கரும்புச்சாறு அருந்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கரும்புச்சாறு குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, கரும்புச் சாறு கோடையில் மட்டுமே குடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குளிர்காலத்தில் கரும்புச்சாறு உட்கொள்வதால் உடலில் நீர்ச்சத்து நிலையாகும். இதன் நன்மைகளை விரிவாக அறிந்துக் கொள்வோம்.
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குளிர்காலத்தில் கரும்பு சாறு குடிப்பதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகள் குணமாகும். கரும்பு சாற்றின் நன்மைகளை விரிவாக அறிந்துக் கொள்வோம்.
உடலை ஹைட்ரேட் செய்ய உதவும் கரும்பு சாறு
குளிர்காலத்தில் கரும்பு சாறு குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், கரும்புச்சாறு குளிர்ந்த காலநிலையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. குளிர்ந்த காலநிலையில் மக்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த நிலையில் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கரும்பு சாறு
கரும்பு சாறு மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. கரும்பு சாறு குடிப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். இது அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டுள்ளது.
எலும்புகளை வலுவாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியுடன், கரும்புச்சாறு எலும்புகளை வலுப்படுத்தும். எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு கரும்புச்சாறு அருந்துவது நன்மை பயக்கும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
கரும்பு சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். கரும்புச்சாறு குடிப்பதால் தூக்கமும் மேம்படும்.
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கரும்பு சாறு
கரும்பு சாறு செரிமான அமைப்புக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைப்பதற்கும், வயிற்றை ஆரோக்கியமாக வைப்பதற்கும் நன்மை பயக்கும். இதை குடிப்பதால் செரிமான மண்டலம் சீராக இருக்கும்.
மஞ்சள் காமாலை குணமாகும்
கரும்புச்சாறு மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கும் நல்லது என்று கருதப்படுகிறது. மஞ்சள் காமாலைக்கு கரும்பு ஒரு சிறந்த மருந்து. கரும்புச்சாறு அருந்தினால் மஞ்சள் காமாலை குணமாகும்.
எடை குறைய பெரிதளவு உதவும்
கரும்பு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். கரும்புச் சாற்றில் கொழுப்புச் சத்து இல்லை. கரும்பு சாறு நார்ச்சத்து நிறைந்தவை ஆகும்.
கரும்பு சாறில் இதுபோன்ற பல நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் உணவே மருந்து என்பதை நினைவில் வைத்துக் கொண்டு எதையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
Pic Courtesy: FreePik