Lemon Tea Benefits: லெமன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Lemon Tea Benefits: லெமன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

உங்களுக்கும் தேநீர் பிடிக்கும் என்றால், பால் டீக்கு பதிலாக லெமன் டீயுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். அனைத்து சீசனிலும் லெமன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக குளிர்காலத்தில் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Raw Turmeric: குளிர்காலத்தில் பச்சை மஞ்சளை எப்படி சாப்பிடணும் தெரியுமா?

குளிர்காலத்தில் லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

லெமன் டீயில் வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6, நியாசின், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் லெமன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படும். இந்நிலையில், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது.

லெமன் டீ குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா? நிபுணரின் கருத்து என்ன?

லெமன் டீயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன, இதனை உட்கொள்வது தொற்றுநோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. பாக்டீரியா அல்லது வைரஸ் காரணமாக சளி பிடித்தாலும், அதை உட்கொள்வதால் நிவாரணம் கிடைக்கும்.

லெமன் டீ குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கலாம். இதனால், நோய்களை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

லெமன் டீ குடிப்பது கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. உண்மையில் வைட்டமின் சி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது உங்கள் எலும்புகளை பலப்படுத்தலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

பற்களின் ஆரோக்கியத்திற்கு நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இது தான்!

Disclaimer