Can we drink milk during kidney stone: சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படும் போது மக்கள் கடுமையான வலி மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் நிலை தீவிரமாகும் போது, கற்களை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில், சில உணவுகளை உட்கொள்வது சிறுநீரக கல் வலியை அதிகரிக்கும் மற்றும் அதிக அளவு கல் உருவாக ஆரம்பிக்கும். இதன் காரணமாக, சிறுநீரக கற்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதில் நிறைய குழப்பம் இருக்கும். அதாவது என்ன உணவை சாப்பிடலாம், என்ன சாப்பிட கூடாது என குழப்பம் இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Ice Apple for Diabetes: சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?
சிறுநீரக கல் பிரச்சினை இருந்தால், பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்பு பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்று பலர் கூற கேள்விப்பட்டிருப்போம். ஏனெனில், இதில் கால்சியம் உள்ளது, இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும் என பலர் நம்புகின்றனர்.
எனவே, பெரும்பாலான மக்கள் பால் குடிப்பதை நிறுத்துகிறார்கள். உண்மையில், சிறுநீரகக் கல் பிரச்னை ஏற்பட்டால் பால் குடிக்கலாமா? கூடாதா? என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள எங்கள் குழு மருத்துவர்களிடம் பேசியது. அவர்கள் கூறிய பதிலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Apple cider vinegar: சட்டுனு உடல் எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகரை எப்போது, எப்படி குடிக்கணும் தெரியுமா?
சிறுநீரகத்தில் கல் இருந்தால் பால் குடிக்கலாமா?

உண்மையில், கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதில்லை. அதிக அளவு ஆக்சலேட் உள்ள உணவுகளை உட்கொள்வதால் தான் சிறுநீரக கல் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சாக்லேட் மற்றும் தேநீர் உட்பட, இயற்கையாகவே ஆக்சலேட்டுகளைக் கொண்ட பல உணவுகள் உள்ளன.
இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் கல் பிரச்சனை ஏற்படாது. ஏற்கனவே, சிறுநீரக கல் உள்ளவர்கள் ஆக்சலேட் உள்ள உணவு மாற்றும் கால்சியம் உள்ள உணவுகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Ghee Cause Acne: நெய் சாப்பிட்டால் பருக்கள் வருமா? நிபுணர்கள் கருத்து!
தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் படி, “கால்சியம் மற்றும் ஆக்சலேட் ஆகிய இரண்டும் உள்ள உணவுகளை உட்கொண்டால், அது சிறுநீரக நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆக்சலேட் நிறைந்த உணவுகளுடன் பால், தயிர் மற்றும் சில பாலாடைக்கட்டிகளை உண்ணும்போது, ஆக்சலேட் மற்றும் கால்சியம் ஆகியவை சிறுநீரகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு வயிற்றிலும் குடலிலும் ஒன்றோடொன்று பிணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும். எனவே, சிறுநீரகக் கல் பிரச்னை இருந்தால், தயக்கமின்றி பால் உட்கொள்ளலாம். அவர்கள் மற்ற பால் பொருட்களையும் சாப்பிடலாம்”.
Pic Courtesy: Freepik