ஆறிப்போன சுடுநீரை மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

Is it ok to drink reboiled water: தண்ணீரை சூடாக குடிக்க வேண்டும் என்று பலரும் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், கொதிக்க வைத்த நீரை மீண்டும் கொதிக்க வைக்கலாமா என்ற குழப்பம் அனைவருக்கும் எழும். இதில் சூடாக்கிய நீரை மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஆறிப்போன சுடுநீரை மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

Is it okay to drink reboiled water: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆதாரங்களில் தண்ணீர் முக்கியமான ஒன்றாகும். ஆனால், நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதா என்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா? ஆம். சில சமயங்களில் தண்ணீரில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், அசுத்தங்கள் போன்றவை காணப்படலாம். இந்த தண்ணீரை நாம் குடிப்பதால் நமக்குப் பல வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்கவே, தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

ஏனெனில், நீரை சூடாக்கும் போது அதில் உள்ள அசுத்தங்கள் நீக்கப்படுகிறது. குடிப்பதற்கு தேநீர், சூப் அல்லது வேறு ஏதேனும் பானங்களைத் தயார் செய்வதற்கு எந்த வடிவத்திலும் கொதிக்கும் நீரை உட்கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் போது அதிகளவு கொதிக்க வைத்து விடுகிறோம். இதனால், எஞ்சியிருக்கும் நீரை சிறிது நேரம் கழித்து பயன்படுத்துவோம். ஆனால், இந்த எஞ்சிய நீரையும் கொதிக்க வைத்து அருந்தும் பழக்கம் பலருக்கும் உண்டு. இவ்வாறு மீண்டும் கொதிக்க வைத்த நீர் ஆபத்துகளைத் தருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதில் எஞ்சியிருக்கும் சூடான நீரை மீண்டும் கொதிக்க வைப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சுடு தண்ணீர் குடித்தால் தலைவலி குணமாகுமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

சூடான நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கொதிக்கும் நீர் ஒரு எளிய மற்றும் பயனுள்ள முறையாகும். இது உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் தரக்கூடியதாகும். இவ்வாறு நீரை கொதிக்க வைத்து குடிப்பது நீரை சுத்திகரிக்கக் கூடிய நம்பகமான வழியாக செயல்படுகிறது. மேலும், இது நீரில் உள்ள ஒட்டுண்ணிகள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய பிற அசுத்தங்களை நீக்குகிறது. இதன் மூலம் நீரினால் பரவக்கூடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆனால், கொதிக்க வைத்து ஆறிப்போன சுடுநீரை மீண்டும் சூடாக்குவதால் பலதரப்பட்ட விளைவுகள் ஏற்படலாம்.

சூடான நீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பதன் விளைவுகள்

எல்லா திரவங்களையும் போலவே, நீரைக் கொதிக்க வைக்கும் போது அதன் திரவம் அதிக செறிவு பெறுகிறது. இதனால், அது கரைந்த உப்புகளின் அளவை அதிகரிக்கலாம். இந்த மீண்டும் கொதிக்க வைத்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து காணலாம்.

கால்சியம்

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் கால்சியமும் ஒன்று. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்க பெரிதும் உதவுகிறது. எனினும், இதன் அதிகப்படியான அளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். அதன்படி, கொதிக்க வைத்த நீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது கால்சியத்தின் கரைந்த அளவு அதிகரிக்கிறது. இது பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

ஆர்சனிக்

சுடு தண்ணீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது, நீரில் கரைந்த ஆர்சனிக் அளவு அதிகரிக்கலாம். தண்ணீரில் உள்ள சிறிய அளவிலான ஆர்சனிக் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், அதிகளவு ஆர்சனிக் காரணமாக மலட்டுத்தன்மை, மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் மனநல கோளாறு போன்ற நிலைமைகளை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த அதிகளவிலான ஆர்சனிக் கொண்ட நீர் உட்கொள்ளல் ஆனது இரத்த ஓட்ட அமைப்பு மற்றும் சரும சேதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Drinking Hot Water: சூடு தண்ணீர் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு குறையுமா? உண்மை இங்கே!

நைட்ரேட்டுகள்

தண்ணீரில் கரைந்த நைட்ரேட் உப்புகள் பொதுவாக உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், அதிகளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கும் போதோ அல்லது மீண்டும் கொதிக்க வைப்பது நைட்ரேட்டுகளை, நைட்ரோசமைன் என்ற ஒரு நச்சுப்பொருளாக மாற்றுகிறது. இந்த நைட்ரோசமைன் காரணமாக லுகேமியா, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

ஃபுளூரைடு

நீரில் கரைந்த ஃபுளூரைடை அதிகளவு உட்கொள்வதால் எலும்பு முறிவு, வலி போன்ற எலும்பு கோளாறுகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளில் அதிகப்படியான ஃபுளூரைடு காரணமாக பற்கள் மற்றும் பல் பற்சிப்பிக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.

நீர் வேதியியலில் மாற்றங்கள்

தண்ணீரை மீண்டும் கொதிக்க வைப்பதால், அதில் கரைந்துள்ள வாயுக்கள் மற்றும் ஆவியாகும் சேர்மங்களின் அளவைக் குறைக்கிறது. இது சுவையை மட்டும் பாதிப்பதில்லை. மாற்றாக, அசுத்தங்களின் செறிவு மற்றும் தேவையற்ற இரசாயனங்களை தண்ணீரில் அதிகரிக்கலாம். இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு தண்ணீரை மீண்டும், மீண்டும் கொதிக்க வைப்பதால் இது போன்ற ஏராளமான உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே தேவையான அளவு தண்ணீரை சூடாக்கி கெட்டில் அல்லது பாத்திரத்தில் நிரப்பி அருந்துவது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Drinking Hot Water: வெந்நீர் குடித்தால் கொலஸ்ட்ரால் குறையுமா? நன்மை மற்றும் தீமைகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

Heavy Rains: மழை கொட்டித் தீரத்தாலும் கவலையே வேணாம்.. இதை மட்டும் பண்ணுங்க!

Disclaimer