$
வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மக்கள் குளிர்ச்சியின் பின்னே ஓடுகின்றனர். இந்த வெயிலில் தொண்டையை குளிர்வித்தால் அருமையாக இருக்கும். ஆனால், ஐஸ் வாட்டர் குடித்தால் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெயிலின் உஷ்ணத்தைத் தணிக்க குளிர்ந்த நீரை அருந்த விரும்புவது இயல்பு. ஆனால் குளிர்ச்சியானது நமது தொண்டையை பாதிக்கிறது என்று எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதனால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது.

ஐஸ் வாட்டர் குடிக்கலாமா.?
பலர் குளிர்ந்த நீரை குடித்துவிட்டு வேலைக்காக வெளியே செல்கின்றனர். இவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது வெயில் எவ்வளவு கடுமையானது என்பது தெரியும். ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். இந்நிலையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாட்டில் தேர்வு..
சிலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிரூட்டப்பட்ட தண்ணீரை நிரப்பி வெளியே செல்லும் போது எடுத்துச் செல்கின்றனர். வெயிலில் பிளாஸ்டிக் உருகி தண்ணீரில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. உருகிய பிளாஸ்டிக்கில் பல நச்சு இரசாயனங்கள் உள்ளன. அந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கின்றனர். முடிந்தால் கிளாஸ் பாட்டில்களை எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட டெரகோட்டா பாட்டில்களை பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Warm Water Benefits: வெறும் வெதுவெதுப்பான நீர் மட்டுமே போதும், அவ்வளவு நன்மைகள்!
எப்போது குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டும்.?
வெயிலில் இருந்து திரும்பிய பின் குளிர்ந்த நீரை குடிப்பது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளியில் இருக்கும் போது நமது உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். அதுவரை வெயிலில் இருந்துவிட்டு, திடீரென வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் குடித்தால், இரண்டு வெப்பநிலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இதனால், இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெயிலில் இருந்து வந்த உடனே குடிக்காமல் 10 நிமிடம் ரிலாக்ஸ் ஆன பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

பானை தண்ணீர் சிறந்தது.!
மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதால் வயிற்றின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஜீரண மண்டலம் சரியாக ஜீரணமாகாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, ஃப்ரிட்ஜ் தண்ணீருக்குப் பதிலாக பானை தண்ணீரைக் குடிப்பது எல்லா வகையிலும் நல்லது.
Image Source: Freepik