
Is it okay to drink less water in the winter: நீரேற்றமாக இருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கான ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக, குளிர்கால மாதங்களில் பலர் தற்செயலாக தண்ணீர் குடிப்பதையே மறக்கின்றனர். ஏனெனில், குளிர்ந்த வானிலை பெரும்பாலும் தாகத்தின் உணர்வை அடக்கலாம். ஆனால், இந்த நீரேற்ற குறைபாடு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இது பல்வேறு வழிகளில் உடலைப் பாதிக்கிறது. இதில் குளிர்ந்த காலநிலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.
குளிர்காலத்தில் போதுமான அளவு நீர் அருந்தாததன் விளைவுகள்
குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி
உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதற்கும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிப்பதற்கும் தண்ணீர் அவசியமாகும். குளிர்காலத்தில் பொதுவாக குறைந்த நோயெதிர்ப்புச் சக்தியே காணப்படுகிறது. எனவே உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நாள்தோறும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதுடன் குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Drink Water: தாகம் எடுக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பவரா நீங்க? இப்படி செய்வது சரியா?
குளிர்கால நீரிழப்பு
நாம் குடிக்கும் தண்ணீரை விட, உடல் அதிகளவு தண்ணீரை இழக்கும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. இது சாதாரண உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று, உட்புற வெப்பம், குறைந்த வெப்பம் போன்றவை சருமத்தில் ஆவியாதல் மற்றும் சுவாச நீர் இழப்பு ஆகியவற்றின் மூலம் நீரிழப்புக்கு பங்களிக்கிறது. குளிர்ந்த காலநிலையில் மக்களுக்கு தாகம் எடுப்பது குறைவாக இருப்பதால், தண்ணீர் உட்கொள்வதும் குறைகிறது. இது குளிர்கால நீரிழப்பை ஏற்படுத்தி, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும், இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம்.
செரிமான பிரச்சனைகள்
குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதாவது செரிமான ஆரோக்கியத்திற்கு போதுமான நீர் அருந்துவது அவசியமாகக் கருதப்படுகிறது. மேலும், இது மலத்தை மென்மையாக்குகிறது. ஆனால், நீரிழப்பானது குடல் இயக்கங்களை மெதுவாக்கி, பொதுவான குளிர்கால பிரச்சனையான மலச்சிக்கல்லை உருவாக்குகிறது.
வளர்ச்சிதை மாற்ற பாதிப்பு
ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. குளிர்ந்த காலநிலையில் குறைந்த அளவு தண்ணீர் அருந்துவது வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைத்து உடல் கலோரிகள் எரிப்பதை கடினமாக்குகிறது. ஆய்வு ஒன்றில், சரியான நீரேற்றத்தின் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
மூட்டு வலி
குளிர்காலத்தில் மூட்டு வலி ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இதற்கு முக்கிய காரணம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதும் அடங்கும். ஏனெனில், போதுமான நீரேற்றம் இல்லாதது மூட்டு வலி மற்றும் விறைப்பை அதிகரிக்கிறது. எனவே குளிர்ந்த காலநிலையின் போது உடலை நீரேற்றமாக வைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?
சருமம், முடி பாதிப்பு
குளிர்காலத்தில் நீரிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக வறண்ட, மெல்லிய தோல் மற்றும் முடி உடைதல் போன்றவை அடங்கும். ஏனெனில், குளிர்ந்த காற்றானது சருமத்தின் ஈரப்பதத்தை இழக்க வைக்கிறது. மேலும், இது இயற்கையான டீஹைட்ரேட்டராக செயல்படுகிறது. எனவே, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், விரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும் நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக குளிர்காலங்களில் அதிகரிக்கும் சரும பிரச்சனைகளுக்கு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில் நாள்பட்ட நீரிழப்பு அரிக்கும் தோலழற்சி போன்ற நிலைமைகளை ஏற்படுத்தலாம்.
அதிக சோர்வு
லேசான நீரிழப்பு காரணமாக உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படலாம். இது கவனம் செலுத்துவதிலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. நீரிழப்பு காரணமாக அறிவாற்றல் செயல்திறன் மற்றும் மனநிலையை பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும், குளிர்காலத்தில் வீட்டிற்குள் தங்குவதும், குளிர்ந்த சூழலில் வேலை செய்வதும் நீரிழப்பு தொடர்பான சோர்வை மேலும் அதிகரிக்கலாம். போதுமான நீரேற்றத்தின் மூலம் சோர்வைத் தவிர்க்கலாம்.
இந்த குளிர் மாதங்களில், போதுமான அளவு நீர் அருந்தாதது இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே உடலுக்குத் தேவையான போதுமான நீரேற்றத்தைப் பெறுவதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Drinking Water Mistakes: தண்ணீர் குடிக்கும்போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!
Image Source: Freepik
Read Next
Inflammation Causes: குளிர்காலத்தில் வீக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களும், அதைத் தடுக்கும் முறைகளும்
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version