Health benefits of eating hazelnuts: பொதுவாக நட்ஸ் வகைகள் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. நட்ஸ் வகைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நட்ஸ்களில் மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, வீக்கத்தைக் குறைக்க மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளை, தின்பண்டங்களாக எடுத்துக் கொள்ளலாம்.
நட்ஸ் வகைகளில் பாதாம், வால்நட்ஸ், முந்திரி மற்றும் ஹேசல்நட்ஸ் போன்றவை அடங்கும். இதில் ஹேசல்நட்ஸ் சற்று சிறப்பான ஒன்றாகும். இது அதன் இனிப்பு, வெண்ணெய் போன்ற சுவைக்காக நன்கு அறியப்படுகிறது. ஹேசல்நட்ஸ் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். இவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஹேசல்நட்ஸில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் ஹேசல்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Eating Nuts Everyday: தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
ஹேசல்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஹேசல்நட்ஸ் ஆனது வைட்டமின் ஈ, மக்னீசியம், தாமிரம் மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.
செரிமான மேம்பாட்டிற்கு
ஹேசல்நட்ஸில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது சீரான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. மேலும், இது நல்ல குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதன் மூலம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற சிக்கல்களைத் தடுக்க இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
ஹேசல்நட்ஸ்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த சமநிலை இதய அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
நீரிழிவு நோய்க்கு
இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடுகள் உள்ளது. மேலும், இதன் மக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது. எனவே ஹேசல்நட்ஸை உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கலாம். இது இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த தேர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் ஊறவைத்த நட்ஸ் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
ஹேசல்நட்ஸில் மக்னீசியம், பாலிஃபினால்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இதன் வழக்கமான நுகர்வு அழற்சி அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய், கீல்வாதன் போன்ற அழற்சி தொடர்பான நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த
ஹேசல்நட்ஸ் வகைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே எலும்பு ஆரோக்கியத்திற்கு ம்கவும் இன்றியமையாததாகும். இந்த மக்னீசியம் சத்துக்கள் எலும்பு வலிமை மற்றும் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கலாம்.
புற்றுநோய் தடுப்பானாக
ஹேசல்நட்ஸில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், அதிலும் குறிப்பாக வைட்டமின் ஈ, மாங்கனீசு மற்றும் இன்னும் பிற பீனாலிக் கலவைகள் உடலில் நோய் செல்கள் வளர்ச்சியைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இதை தொடர்ந்து அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் ஹேசல்நட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Brazil Nuts Benefits: உறுதியான உடலுக்கு பிரேசில் நட்ஸ்..! நன்மைகள் இங்கே..
Image Source: Freepik