Ponnanganni keerai benefits: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அவ்வாறே காய்கறிகள், பழங்கள், விதைகள், கீரைகள் என பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக, கீரை வகைகளில் ஏராளம் உள்ளது. அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரையானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளர்க்கப்படக்கூடிய கீரை வகையாகும். இதன் தாவரவியல் பெயர் alternanthera sessilis என்றழைக்கப்படுகிறது. மேலும் இது amarantheceae குடும்பத்தைச் சார்ந்ததாகும். இது ஒரு வற்றாத மூலிகை என்றும் அழைக்கப்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரையின் இலைகள் நீள்வட்டமாகவும், பூக்கள் பளபளப்பாக மற்றும் வெண்மையாக காணப்படும்.
இந்த கீரையில் இரண்டு வகைகள் உள்ளது. அவை நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி. இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி பச்சை இலைகளையும், சீமை பொன்னாங்கண்ணி இளஞ்சிவப்பு இலைகளையும் கொண்டிருக்கும். இந்த இரண்டுமே ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இது பெரும்பாலும் இலைக்காய்கறியாக மட்டுமே உட்கொள்ளப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Palak Keerai Benefits: பாலக் கீரையில் இவ்வளவு இருக்கா.? பாலக் கீரை கூட்டு செய்வோம் வாருங்கள்..
பொன்னாங்கண்ணி கீரையின் ஊட்டச்சத்துக்கள்
இந்த ஆரோக்கியமான கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கீரையானது எந்த சூழலிலும் எளிதாக வளரக்கூடியதாகும். இதில் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்
உடல் வெப்பத்தைத் தணிக்க
பொன்னாங்கண்ணி கீரையின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயை உச்சந்தலையில் ஆழமாக தேய்த்து, சுமார் 15 நிமிடம் வைத்திருக்கலாம். அதன் பிறகு ஷாம்பு பயன்படுத்தி கழுவலாம். இவ்வாறு செய்வது உடல் சூட்டை நீக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் சாதாரண வெப்பநிலைக்குக் குறைக்கப்பட்டு கண்களை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது. இவ்வாறு சீரான இடைவெளியில் இதைப் பயன்படுத்துவது நல்ல முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
ஆற்றலை அதிகரிக்க
பொன்னாங்கண்ணி கீரை உடலின் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு, பொன்னாங்கண்ணி சாற்றை பசும்பாலில் கலந்து சாப்பிடலாம். இது உடல் வலிமை பெறவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் பசும்பாலுக்கு பதிலாக ஆட்டுப்பாலையும் பயன்படுத்தலாம். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொன்னாங்கண்ணி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டமும் மேம்படும் எனக் கூறப்படுகிறது.
எடை அதிகரிப்பிற்கு
குறைந்த எடை உள்ளவர்கள், உடல் எடையை அதிகரிக்க பொன்னாங்கண்ணி இலையை பயன்படுத்தலாம். இதற்கு துவரம் பருப்பு, நெய் மற்றும் பொன்னாங்கண்ணி இலையை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வருவது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை சூப்பாக சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vallarai Keerai Benefits: வல்லாரை கீரையின் அற்புத நன்மைகள் இங்கே..
கண் சார்ந்த பிரச்சனைகள் நீங்க
பொன்னாங்கண்ணி கீரை அல்லது இலைகள் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறது. கண் இமைகளில் ஏற்படும் அழற்சியை குணமாக்க புதிய பொன்னாங்கண்ணி இலைகளை பயன்படுத்தலாம். மேலும், இவை கண்களில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி மற்றும் வெண்படல அழற்சியைக் குணப்படுத்த உதவுகிறது. உலர் பொன்னாங்கண்ணி இலைகளை பொடியாக்கி பயன்படுத்துவது விஷத்தின் தன்மையை நீக்க உதவுகிறது. இதை முதலுதவிக்காக பயன்படுத்துகின்றனர்.
மலச்சிக்கல்லை குணமாக்க
பொன்னாங்கண்ணி கீரையை மலச்சிக்கல்லை குணமாக்க உதவலாம். கேரட்சாறுடன் சம அளவிலான பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து தொடர்ந்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரையை வழக்கமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல்லைக் குணமாக்கலாம்.
ஆஸ்துமாவை குணப்படுத்த
தொடர் இருமலால் அவதிப்படுபவர்களுக்கு பொன்னாங்கண்ணி இலை சிறந்த தேர்வாகும். இதற்கு பொன்னாங்கண்ணி சாற்றை ஒன்று அல்லது இரண்டு பூண்டுப் பற்கள் சேர்த்து, இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வருவதன் மூலம் தொடர் இருமல், இடைவிடாத காய்ச்சல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடக்கத்தான் கீரையை இப்படி சாப்பிட்டா மூட்டு வலி மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராதாம்!
Image Source: Freepik