Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

இதய ஆரோக்கியம்.. பூண்டின் 5 அதிசயமான பயன்பாடுகள்.! ஆயுர்வேத நிபுணர் பரிந்துரைகள்..

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூண்டை எவ்வாறு பயன்படுத்தலாம்? பூண்டு டீ, பச்சை பூண்டு, பூண்டு சாறு, பூண்டு எண்ணெய் போன்ற 5 முக்கிய வழிகளையும், அதன் மருத்துவ நன்மைகளையும் இந்த கட்டுரை விளக்குகிறது.

உணவின் சுவையை உயர்த்தும் பூண்டு, குணப்படுத்தும் ஆயுர்வேத மூலிகையாகவும் அறியப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இதயத்தை பாதுகாப்பது வரை பல நன்மைகளைக் கொண்டது.

ஜெய்ப்பூரில் உள்ள பாபு நகரு இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா கூறுவதன்படி, பூண்டை சரியான முறையில் உட்கொள்வது கொழுப்பு அளவைக் குறைத்தும், இரத்த அழுத்தத்தை சீர்செய்தும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

karnataka girl heart attack in tamil

ஆரோக்கியமான இதயத்திற்குப் பூண்டை பயன்படுத்த 5 முக்கியமான வழிகள்

1. உணவில் சேர்த்து சாப்பிடுதல்

சூப், காய்கறி, சாலட் போன்ற உணவுகளில் நறுக்கி பூண்டை சேர்ப்பது:

  • இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
  • இதயக் கோளாறுகளின் அபாயத்தை குறைக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

2. காலையில் வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டு

ஒரு பல் பச்சை பூண்டை தண்ணீருடன் விழுங்குவது:

  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
  • கொழுப்பைக் குறைக்கும்
  • இரத்த சர்க்கரையை சீர்செய்யும்
  • தமனிகளில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்

இந்த பதிவும் உதவலாம்: இதயம் பலமாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் தான் சிறந்த மருந்து.. டாக்டர் சிவராமன்  பரிந்துரை..

3. பூண்டு சாறு (600–1200 mg)

நிபுணர் ஆலோசனையின் பேரில் பூண்டு சாற்றை உட்கொள்வது:

  • இதயத் தசைகளை வலுப்படுத்தும்
  • ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும்
  • கொழுப்பை கட்டுப்படுத்தும்

4. பூண்டு தேநீர்

பூண்டு டீ குடிப்பது:

  • வீக்கம் மற்றும் அழற்சியை குறைக்கும்
  • இரத்தக் கட்டி உருவாவதைத் தடுக்கும்
  • தமனிகளை பாதுகாப்பதில் உதவும்

மேலும், பூண்டை தேனில் புளிக்கவைத்து உட்கொள்வதும் இதயத்திற்கு நல்லது.

5. பூண்டு கலந்த எண்ணெய்

பூண்டு எண்ணெயை காய்கறி சமைப்பதில், சாலட் டிரஸ்ஸிங்கில் பயன்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

1

இறுதியாக..

பூண்டை பச்சையாக, சாறு, டீ, எண்ணெய் என பல வடிவங்களில் உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். ஆனால் அளவுக்கு மீறாமல், ஒவ்வாமை, கர்ப்பகாலம், தாய்ப்பால் காலத்தில் தவிர்த்து, இதயத்துடன் தொடர்பான பிரச்சனைகள் தென்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ தகவல், விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நல ஆலோசனைகளுக்கு மருத்துவரை அணுகவும்.

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. இதய நோயால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

சுவாச சிரமம், மார்பு வலி, சோர்வு, இதயத் துடிப்பு மாற்றம், தலைச்சுற்றல், கால்களில் வீக்கம், வியர்வை, மயக்கம்.

2. காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்ன நன்மை?

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் சீராகும், செரிமானம் மேம்படும், இதயம் பாதுகாப்பாகும்.

3. இதயத்தை வலுப்படுத்த என்ன சாப்பிட வேண்டும்?

முழுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், பழச்சாறு, புரதச்சத்து உணவுகள்.

Read Next

இதயத்திற்கு விஷமாகும் 5 ஆபத்தான உணவு சேர்க்கைகள் – இதயநோய் நிபுணர் எச்சரிக்கை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 30, 2025 21:57 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content