Sat Sep 12, 2026 | 12:01 AM IST

Doctor Verified

படிக்கும் போது தூக்கம் வருதா.? இத மட்டும் பண்ணுங்க.. தூக்கம் உடனே ஓடிடும்.!

படிக்கும் நேரத்தில் தூக்கம் அதிகமாக வருகிறதா? இதற்கான காரணங்கள் என்ன? அதை கட்டுப்படுத்த மருத்துவர் சிவராமன் கூறிய உணவு பழக்கங்கள், பிராணாயாமம், குறிப்பாக கபாலபதி பயிற்சி எப்படி உதவுகிறது என்று இந்த கட்டுரையில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

பெரும்பாலான மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் போது திடீரென தூக்கம் வரும் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கான மிகப் பெரிய காரணம் வயிறு நிறைய சாப்பிடுவது என்று மருத்துவர் சிவராமன் தெரிவிக்கிறார். உடல் தேவைக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொண்டால், அதை செரிமானம் செய்ய உடல் கூடுதல் வேலை செய்ய வேண்டி வரும். இதனால் மூளை செயல்பாடு மந்தமாகி, படிக்கும் போது உடனே தூக்கம் வரத் தொடங்குகிறது.

Video Link: https://youtu.be/8FsiCtDbPNQ

உணவு பழக்கத்தை மாற்றினால் தூக்கம் குறையும்

நிறைவாக சாப்பிடுவதை விட, சரியான அளவில், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார். வயிறு கனமாக இருந்தால், படிப்பில் கவனம் செலுத்தும் திறன் குறையும். எனவே மாணவர்கள் லைட் உணவுகள், சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை அதிக பயன் அளிக்கும்.

கபாலபதி – மாணவர்களுக்கு உடனடி விழிப்புணர்ச்சியை வழங்கும் பயிற்சி

படிக்கும் போது தூக்கம் வராமல் இருக்க பிராணாயாமம் மிகவும் உதவும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக கபாலபதி பயிற்சி மாணவர்களுக்கு விரைவில் விழிப்புணர்ச்சி அளிக்கும்.

கபாலபதி என்றால் என்ன?

மூக்கின் இரு துவாரங்களிலும் வேகமாக மூச்சை வெளியேற்றும் செயலே கபாலபதி. இது மூளை நரம்புகளைத் தூண்டி உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கிறது. மருத்துவர் கூறுவதப்படி, தூக்கம் வரும் நேரத்தில் 10–15 முறை வேகமாக கபாலபதி செய்தால், தூக்கம் உடனடியாக குறையும். இந்த பயிற்சி உடல் ஆற்றலை அதிகரித்து, படிப்பில் கவனம் திரும்ப உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சியா சீட்ஸ் முதல்.. ப்ரோக்கோலி வரை.. குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து உணவுகள் இங்கே.!  மருத்துவர் பரிந்துரை..

படிக்கும் போது தூக்கம் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

* கனமான உணவை தவிர்க்கவும்

* இடைவெளி இடைவெளியாக தண்ணீர் குடிக்கவும்

* படிக்கும் இடத்தில் காற்றோட்டம் இருக்க வேண்டும்

* 20-25 நிமிடம் படித்து 5 நிமிடம் ஓய்வு எடுக்கவும்

* உடலை நீட்டும் ஸ்ட்ரெச்சிங் செய்யவும்

* உடனடி புத்துணர்ச்சி தர கபாலபதி 10-15 முறை செய்யலாம்

இறுதியாக..

படிக்கும் நேரத்தில் தூக்கம் வருவது ஒரு சாதாரண பிரச்சனை என்றாலும், உணவு பழக்கத்தை மாற்றுவது மற்றும் சரியான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது மூலம் அதை எளிதாக கட்டுப்படுத்தலாம். மருத்துவர் சிவராமன் கூறும் இந்த சிறிய மாற்றங்கள் மாணவர்களுக்கு அதிக கவனம், அதிக ஆற்றல், அதிக நினைவாற்றலை வழங்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள எந்த விளக்கத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read Next

தோலில் வெண்புள்ளிகள் இருக்கா? அதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 19, 2025 10:21 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content