குழந்தைகளுக்கு இந்த குக்கீஸ் குடுத்து பாருங்க! திரும்ப திரும்ப கேப்பாங்க

  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு இந்த குக்கீஸ் குடுத்து பாருங்க! திரும்ப திரும்ப கேப்பாங்க

இதனைத் தவிர்க்க, நாம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஐஸ்கிரீம், குக்கீஸ், சாக்லேட்டுகள் போன்றவற்றைச் செய்யலாம். ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு அரிசியைப் பயன்படுத்தி குக்கீஸ் தயார் செய்யலாம். இதில் குழந்தைகள் விரும்பக்கூடிய குக்கீஸை கருப்பு அரிசி கொண்டு எவ்வாறு தயார் செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Kids Snack Recipes: ஸ்கூல் விட்டு வரும் குழந்தைளுக்கு இதை செஞ்சி கொடுங்க!

கருப்பு அரிசி குக்கீஸ் தயாரிக்கும் முறை

தேவையானவை

  • கருப்பு கவுனி அரிசி - கால் கிலோ
  • கடலை மாவு - சிறிதளவு
  • கோதுமை மாவு - 200 கிராம்
  • பேக்கிங் பவுடர் - சிறிதளவு
  • நாட்டு சர்க்கரை - 100 கிராம்
  • வெண்ணெய் - 50 கிராம்
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டர் பேப்பர் - 1

கருப்பு அரிசி குக்கீஸ் செய்முறை

  • முதலில் அடுப்பில் தோசை சட்டியை வைத்து மிதமான தீயில் சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கடாய் ஒன்றில் பட்டர் பேப்பரை  வைத்து  அதன் மீது லேசாக வெண்ணெய் தடவி வைத்துக் கொள்ளலாம்.
  • அதன் பின், ஒரு மிக்ஸியில் கவுனி அரிசியை சேர்த்து நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர், பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெய், நாட்டு சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இதை ஒரு மாவு சலிக்கும் தட்டை எடுத்து, அதில் கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இந்த மாவை வெண்ணெய், நாட்டு சர்க்கரை கலந்து வைத்துள்ள பாத்திரத்தில் சளித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றைக் கலந்து மாவை நன்கு பிசைந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Rice Benefits: கருப்பு அரிசி சாப்பிடுவதில் என்னென்ன நன்மைகள் இருக்கும் தெரியுமா?

  • இந்த பிசைந்த மாவை 15 நிமிடங்கள் அப்படியே மூடி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக குக்கீஸ் வடிவில் தட்டி பட்டர் பேப்பர் வைத்திருந்த கடாயில் வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, இந்த கடாயை எடுத்து, சூடாக்கி வைத்த தோசை சட்டியில் வைத்து மூடி வைக்கலாம்.
  • இதை அப்படியே வைத்தால் 20 நிமிடங்களில் நன்கு வெந்து விடும்.
  • இப்போது சுவையான குக்கீஸ் தயாராகி விட்டது.
  • பிறகு இதனை ஒரு பிளாஸ்டிக் குடுவையில் அடைத்து, பாதுகாப்பாக வைக்கலாம். இவ்வாறு வைப்பது 2 வாரங்களுக்கு மேல் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.

மற்ற குக்கீஸ்கள்

இவ்வாறு அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கொண்ட கவுனி அரிசியில் சுவையான குக்கீஸைத் தயார் செய்யலாம். மேலும், இதனைப் போலவே கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற இன்னும் பிற ஊட்டச்சத்து மிக்க பொருள்களிலும் இம்முறையைப் பயன்படுத்தி குக்கீஸ் தயார் செய்யலாம்.

இது ஆரோக்கியமாக இருப்பதுடன், குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறது. மேலும், இதில் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் பெரியவர்களும் இதனை உட்கொள்ளலாம். இவ்வாறு எளிமையான முறையில் சுவையான குக்கீஸ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Rice Benefits: இது தெரிஞ்சா வெள்ளை அரிசிக்கு பதிலா கருப்பு அரிசியை தான் சாப்பிடுவீங்க

Image Source: Freepik

Read Next

Rice Benefits: ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் அரிசி சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

Disclaimer

குறிச்சொற்கள்