Black Rice Benefits: கருப்பு அரிசி சாப்பிடுவதில் என்னென்ன நன்மைகள் இருக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Black Rice Benefits: கருப்பு அரிசி சாப்பிடுவதில் என்னென்ன நன்மைகள் இருக்கும் தெரியுமா?


Benefits Of Eating Black Rice: பொதுவாக அரிசியில் நிறைய வகைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் கருப்பு அரிசி குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வெள்ளை அரிசியை விட கருப்பு அரிசி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது முதலில் சீனாவில் தோன்றி, பின் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இதன் சுவை, நிறம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு மிகவும் பிரபலமானது. இது தொழில்நுட்ப ரீதியாக சுத்திகரிக்கப்படாத அரிசி வகையைச் சார்ந்ததாகும். கருப்பு அரிசியில் நிறைய வகைகள் உள்ளன.

ஊட்டச்சத்துக்கள்

கருப்பு அரிசியின் நிறமானது ஆந்தோசயனின் என்ற நிறமியின் காரணமாக வருகிறது. இது சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

பிற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் கருப்பு அரிசியில் அதிக அளவிலான புரதம் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல ஏதுவாகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

கருப்பு அரிசி சாப்பிடுவதன் நன்மைகள்

தாவர கலவை

இதில் உள்ள ஆந்தோசயனின் என்ற தாவர கலவை, ஃபிளவனாய்டு தாவர நிறமிகளின் குழு ஆகும். இந்த ஆந்தோசயனின்கள் வலுவான அழற்சி எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் ஆன்டி கேன்சர் விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

கருப்பு அரிசியில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஆந்தோசயனின்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக போராடுகிறது. இது மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், அல்சைமர் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கின்றன. இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளன.

புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள்

கருப்பு அரிசியில் உள்ள ஆந்தோசயின்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், ஆந்தோசயனின் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுப்பது பெருங்குடல் புற்றுநோயின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்தோசயனின்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன. மேலும் இது மார்பக புற்றுநோயின் வளர்ச்சியையும், பரவலையும் தடுப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

இதய ஆரோக்கியம்

கருப்பு கவுனி அரிசியை எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு குறைவான நன்மைகளைத் தருகிறது எனக் கூறப்படுகிறது. எனினும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு கொண்ட பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆந்தோசயனின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்தி கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்தது கண்டறியப்பட்டது.

சர்க்கரை நோய்க்கான கருப்பு அரிசி

கருப்பு அரிசி குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது. இது நிலையான ஆற்றலை வழங்குவதுடன், இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது. மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

உடல் எடை இழப்புக்கு

கருப்பு அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது நீண்ட காலத்திற்கு நம்மை நிறைவாக வைத்திருப்பதுடன் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், கொலஸ்ட்ரால் உற்பத்திக்குக் காரணமான என்சைம்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

Image Source: Freepik

Read Next

Ginger Tea Benefits: தினமுன் இஞ்சி டீ குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன ஆகும்?

Disclaimer

குறிச்சொற்கள்