Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Banana Parotta: ரெண்டு வாழைப்பழம் இருந்தால் போதும் அட்டகாசமான பரோட்டா செய்யலாம்!

அட உங்களுக்கும் பரோட்டா பிடிக்குமா? அப்போ மறக்காம கண்டிப்பா வாழைப்பழ பரோட்டா ட்ரை பண்ணுங்க. வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க.

Banana Parotta Recipe In Tamil: பரோட்டா பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் பரோட்டா மைதா பயன்படுத்தி செய்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்தாலும் மாதம் ஒரு முறையாவது பரோட்டா சாப்பிட்டு தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்ளுபவர்கள் பலர். சூடான இரண்டு பரோட்டாவை பர பர என தட்டில் பிட்சு போட்டு.

அதன் மேல் சால்னா ஊற்றி 20 வினாடி ஊறவைத்து எடுத்து சாப்பிட்டால்… அடடே, கேட்கும் போதே நம்மில் பலரது நாவில் எச்சில் ஊறி இருக்கும். அந்தவகையில், பரோட்டா பிரியர்களுக்கான நாங்கள் ஒரு புதிய ரெசிபியை கூறுகிறோம். வாருங்கள், வாழைப்பழ பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Schezwan Paneer: உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? ஒரு முறை இப்படி செஸ்வான் பன்னீர் செய்து சாப்பிடுங்க!

தேவையான பொருட்கள்

பரோட்டா மாவு செய்ய

மைதா மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

வாழைப்பழ கலவை செய்ய

வாழைப்பழம் - 3
பொடித்த வெல்லம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி பருப்பு நறுக்கியது
காய்ந்த திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
பிரட் தூள்

வாழைப்பழ பரோட்டா செய்முறை:

Banana Paratha Recipe | Banana Paratha Breakfast | Easy Paratha Recipe |  N'Oven Foods

  • பரோட்டா மாவு செய்ய ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து, பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக 5 நிமிடம் பிசையவும்.
  • பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • வாழைப்பழ கலவை செய்ய ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், பொடித்த வெல்லம், துருவிய தேங்காய், முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து பிரட் தூள் சேர்த்து சரியான பதத்திற்கு கலக்கவும்.
  • அடுத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.
  • பின்பு சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி மாவை வைத்து தேய்த்து, மாவின் மேல் வாழைப்பழ கலவையை வைத்து மாவை மடிக்கவும்.
  • பானில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் செய்த பரோட்டாவை வைக்கவும்.
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாழைப்பழ பரோட்டாவை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வாழைப்பழ பரோட்டா ரெடி!.

இந்த பதிவும் உதவலாம்: Lemon Tea: அட லெமன் டீ குடித்தால் இந்த பிரச்சனை எல்லாம் குணமாகுமாம்... பயன்கள் இங்கே!

வாழைப்பழ பரோட்டா பயன்கள்:

நார்ச்சத்து ஆதாரம்: முழு கோதுமையுடன் தயாரிக்கப்படும் போது, பரோட்டா உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக இருக்கும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஒழுங்கை ஊக்குவிக்கிறது.

சத்துக்கள் நிறைந்தது: முழு கோதுமை மாவில் பி வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

புரத உள்ளடக்கம்: மிதமான அளவு புரதத்தை வழங்குகிறது, குறிப்பாக புரதம் நிறைந்த பக்க உணவுகளுடன் இணைக்கும்போது.

ஆற்றல் ஆதாரம்: அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் நீடித்த ஆற்றலை வழங்க முடியும், இது சுறுசுறுப்பான நபர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

idly vs dosa: இட்லியா? தோசையா? ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல! ஆனா இதை சாப்பிட்டா தப்பிச்சீங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content